தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி கல்ராயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி மகன் சுருளிவேல். வயது 44. இவர் உத்தமபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்பகுதியில் வசிக்கும் 9 வயது சிறுமி கடைக்கு சென்று வருகையில் அவ்வப்போது மிட்டாய் வாங்கி கொடுத்து பழகி உள்ளார். சிறுமியிடம் நன்றாக நட்பு வளர்த்த சுருளிவேல், அதன் பின் தனது காமுக வேலையை துவங்கி உள்ளார். சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவது, தவறாக தொடுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். விவரம் அறியாத சிறுமியும் இதனை சாதரணமாக எடுத்துக்கொண்டு பழகி உள்ளார்.

நாளுக்கு நாள் சுருளிவேலின் பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளது. ஒருநாள் இதனை அதேபகுதியை சேர்ந்த வேறு சிலர் பார்த்துள்ளனர். அதிர்ச்சி அடைந்த அவர்கள், சுருளிவேலை கண்டித்ததுடன், சிறுமியின் பெற்றோருக்கும் இதுகுறித்து தகவல் அளித்துள்ளனர். உடனே வந்து சிறுமியை மீட்ட பெற்றோர், சுருளிவேலை திட்டித்தீர்த்துள்ளனர். அதன்பின் அக்கம்பக்கத்தினர் அறிவுறுத்தலின் பேரில், கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதி உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் சுருளிவேலை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தேனி, திமுகவில் கடும் சண்டை..! அறிவாலயத்தில் பஞ்சாயத்து.. உள்ளடி ரிப்போர்ட்..!

தொடர்ந்து இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில், இன்று வழக்கு விசாரணை விடிவுற்று சுருளி வேல் என்பவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டது. இதில் சிறுமிக்கு பலமுறை பாலியல் சீண்டல் செய்த குற்றத்திற்காக சுருளி வேல் என்பவருக்கு 2019 ஆம் ஆண்டு குழந்தைகள் பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாப்பு திருத்த சட்ட பிரிவு 3(d), 4(2), 5(m), 6, 7, 8, ஆகிய பிரிவின் கீழ் 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 40,000 ரூபாய் அபராதமும், அந்த அபராத தொகையை கட்டத் தவறினால் மேலும் 2 வருடம் மெய்க்காவல் சிறை தண்டனை விழித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி கணேசன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதனை அடுத்து குற்றவாளி சுருளிவேலை காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று சிறையில் அடைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தம்பி கண் எதிரே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. முன்னாள் காதலன் வெறிச் செயல்..!