அமெரிக்காவின் கணினி விஞ்ஞானி மற்றும் பாட்காஸ்டர் லெக்ஸ் பிரிட்மேனுக்கு பிரதமர் மோடி 3 மணி நேரம் வரை நேர்காணல் அளித்தார். லெக்ஸ் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிரதமர் மோடி மிகவும் பொறுமையாகவும், நிதானமாகவும், அதேநேரம், வெளிவராத பல்வேறு தகவல்களையும் தெரிவித்தார்.

பாஜகவின் சித்தாந்தரீதியான ஆலோசகரான ஆர்எஸ்எஸ் அமைப்புடன் இருக்கும் தொடர்பு குறித்து பிரதமர் மோடி பேசியதாவது:
ஆர்எஸ்எஸ் அமைப்பு எனக்கு வாழ்க்கைக்கான நோக்கத்தைக் கொடுத்து, தன்னலமற்ற சேவையின் மதிப்புகளை எனக்குள் விதைத்தது. ஆர்.எஸ்.எஸ் அவரது வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தைக் கொடுத்து, 'தன்னலமற்ற' சேவையின் மதிப்புகளை அவருக்குள் விதைத்தது. என் வாழ்க்கையின் நோக்கத்தையும், தன்னலமற்ற சேவையையும் ஆர்எஸ்எஸ் அமைப்பிடம் இருந்து பெற்றதில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்.
இதையும் படிங்க: ஆர்.எஸ்.எஸ் மோடி வாழ்க்கையில் எவ்வளவு முக்கியத்துமானது..? நெகிழ்ந்து சொன்ன பிரதமர்..!

இந்தியா முழுவதும் ஆர்எஸ்எஸ் அமைப்பு கல்வி, சுகாதாரம், உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் தன்னலமற்ற சேவைகளைச் செய்துள்ளது. இடதுசாரி தொழிற்சங்கங்கள் உலகில் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் உலகை ஒருங்கிணைக்கிறார்கள் என்கிறார்கள். இந்த வேறுபாடுதான், சமூக சேவைக்குள் எவ்வாறு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மதிப்புகளை புகுத்துகிறது என்பது தெரியவரும்.

ராமகிருஷ்ண பரமஹம்ச ஆஸிரமத்தில் நான் இருந்தபோது, பல துறவிகளைச் சந்தித்தேன், அவர்களின் ஆசிகளைப் பெற்றேன். ஸ்வாமி ஆத்மஸ்தானந்தா எனக்கு என் வாழ்க்கையின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்யவதாகவும், அவர்களின் நலனுக்கு உதவுவதாக இருக்க வேண்டும் என்று ஆசிர்வதித்தார்.
இந்தியா என்பது புத்தர், காந்தி வாழ்ந்த மண். முரண்பாடு, சண்டை ஆகியவற்றுக்குப் பதிலாக அமைதியை உலகிற்கு போதித்த மண். இந்தியாவின் உலகின் கவனத்தை திருப்பியவர்கள், ஒற்றுமைக்கு இலக்கனமாக இருக்கிறது.
1+1 கொள்கை!
என் தனிப்பட்ட வாழ்க்கையில் 1+1 என்ற கொள்கையை பின்பற்றுகிறேன். ஒன்று என்பது நான்(மோடி) மற்றொன்று என்பது இறைசக்தி. நான் எப்போதும் கடவுள் என்னை தனிமையாக உணர்ந்ததில்லை, கடவுள்எப்போதும் என்னுடன் இருக்கிறார். மக்களுக்கு செய்யும் தொண்டு கடவுளுக்கான சேவை.

மகாத்மா காந்தி சுதந்திரப்போராட்டத்தை மக்களின் போராட்டமாக மாற்றிய மாபெரும் தலைவர், மக்களின் சக்தியை உலகிற்கு உணரவைத்தவர். ஒவ்வொரு செயலிலும் மக்களை காந்தியக் கொள்கையில் ஈடுபட வைக்க நான் முயல்கிறேன். 20ம் நூற்றாண்டு மட்டுமல்ல 21ம் நூற்றாண்டிலும் மகாத்மா காந்திதான் ஒப்பற்ற தலைவர்.
நான் எப்போதும், தேர்தலை மையமாக வைத்து ஆட்சி செய்யவில்லை. மக்களை மையாக வைத்தும் நிர்வாகம் செய்யவில்லை. என்னுடைய அரசின் கொள்கை ஒரு நிறைவு கொள்கையைப் பின்பற்றுகிறது அரசின் திட்டங்கள், நன்மைகள் பாகுபாடு இல்லாமல் அனைவரையும் சென்றடைகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையும் படிங்க: வெளிநாடுகளில் இந்துக்களை பாதுகாக்க வேண்டும்.. ஆர்எஸ்எஸ் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்ற திட்டம்..!