மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்முடிவு அறிமுகப்படுத்தப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளியின் நலனுக்காக சமூகப் பாதுகாப்பு அளித்தல், சிறப்புக் கல்வி, தொழிற்பயிற்சி அளித்தல், சுய வேலைவாய்ப்பு அளித்தல், உதவி உபகரணங்கள் வழங்குதல், தடையற்ற சூழல் அமைத்தல் மற்றும் சிறப்பு பள்ளிகள் இல்லங்கள் ஆகியவற்றின் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக பட்டியலிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசு பணியாளர்களுக்கான தேர்வுகளில் மாற்றுத் திறநாளிகளுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 4% இட ஒதுக்கீடு மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை 493 மாற்றுத் திறநாளிகள் அரசு பணியினை பெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

அதேபோன்று மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்துவதை தனியார் துறையிலும் ஊக்குவிக்கும் பொருட்டு தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் குறைந்தது 10 மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தி இருந்தால், அத்தகைய நிறுவனங்களுக்கு மாதம்தோறும் ஒரு நபருக்கு ₹2000 வீதம் ஊதிய மானியத்தினை ஒரு ஆண்டிற்கு அரசு வழங்கும் உலக வங்கியின் கடன் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகளின் உரிமை திட்டத்தை ரைட்ஸ் மூலம் 2024 25 ஆம் ஆண்டு நிதியாண்டில் ஐந்து மாவட்டங்களில் முதல் கட்டமாக 10 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களிலும், 38 வட்டார அளவிலான சேவை மையங்களிலும் தொடங்கப்பெற்று மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு தேவைகளை நிறைவேற்றும் வகையில் ஆறு வகையான மறுவாழ்வு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: போட்டுறா வெடிய..! சென்னைக்கு அருகே உலகத் தர வசதிகளுடன் புதிய நகரம்... இவ்வளவு வசதிகளா?
இத்திட்டத்தில் 2025 26 ஆம் ஆண்டில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் 82 வருவாய் கோட்ட அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும், 400 வட்டார அளவிலான ஒருங்கிணைந்த சேவை மையங்களும் ஏற்படுத்தப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் தற்சார்புடன் இயல்பு நிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில் உயர் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட திறன்மிகு கண்ணாடிகள், ஸ்மார்ட் மெஷின், கிளாஸஸ், அறிவுசார் மாற்றுத் திறன் குழந்தைகளுக்கான கற்பிக்கும் உபகரணங்கள், டிஎல்எம் கிட், நிற்க இயலாத மாற்றுத் திறநாளிகளுக்கு உதவும் நவீன உபகரணங்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன கருவிகள் அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளின் தேவைக்கேற்ப வழங்கும் திட்டம் 125 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டம் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து வகை உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன முறையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கிடும் வகையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் தக்க சட்ட முன்முடிவு அறிமுகப்படுத்தப்படும். இதன் மூலம் மாற்றுத் திறநாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிப்பது மட்டுமன்றி அவர்கள் உள்ளாட்சி நிர்வாகத்தை வழிநடத்தும் வல்லமை பெற்றவர்களாகவும் திகழ்வார்கள். இந்த வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் மாற்று திறனாளிகள் நலத்துறைக்கு 1,433 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பட்ஜெட் தொடங்கியதும் நடையை கட்டிய அதிமுக... இதுதான் பிரச்சனையாம்!!