அண்ணாமலை எதிரிகளுக்குதான் நெருப்பு நண்பர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அகல் விளக்கு என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புகழ்ந்துள்ளார்.
சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் விழாவில் பங்கேற்ற அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமிழ்நாட்டிலே ஆளுகின்ற திமுக மாத்திரமே ஏதோ இஸ்லாமியர்களின் உறவினரை போல இஸ்லாமியர்களுக்கு பாதுகாவலர் போல ஒரு பிம்பத்தை ஏற்படுத்துகின்றனர். திமுகவும், அதன் தலைவர் மு.க.ஸ்டாலினும் பாரதிய ஜனதா கட்சியையும் மத்திய அரசையும் இஸ்லாமிய எதிரிகள் போல பொய்யான பிரச்சாரத்தை தொடர்ந்து செய்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டிலே வாழ்கின்ற இஸ்லாமிய சொந்தங்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். 99யில் பாரதிய ஜனதா கூட்டணியிலே மத்தியிலே ஆட்சியிலே அங்கம் வைத்தவர்கள் தான் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்கள், அவர்கள் அங்கே அமைச்சர்களாக இருந்தவர்கள். அப்பொழுதெல்லாம் பாரதிய ஜனதா கட்சி மக்களின் நண்பர்களாக குறிப்பாக சிறுபான்மை மக்களின் தோழர்களாக அவர்களால் அன்றைக்கு சித்தரிக்கப்பட்ட பாரதிய ஜனதா கட்சி, இன்று சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கிக்காக தமிழ்நாட்டு மக்களை திசை திரும்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது என குற்றச்சாட்டினார்.

இதையும் படிங்க: இபிஎஸ் - ஓபிஎஸ் நடுவுல புகுந்து ஆட்டையைக் கலைக்கும் டிடிவி... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டார் பாருங்க துண்டு...!
மும்மொழி கொள்கையாக இருக்கட்டும். சிறுபான்மையிக்கு எதிரான எந்த ஒரு திட்டத்தையும் குறிப்பாக தமிழ்நாட்டிலே வாழ்கின்ற மக்களுக்கு எதிராக எந்த ஒரு சட்டத்தையும் திட்டத்தையும் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரவில்லை என்பதை அனைவரும் உணர்ந்து வருகிறார்கள். பிற மாநிலங்களிலே எப்படி பாரதிய ஜனதா கட்சிக்கு சிறுபான்மை மக்கள் குறிப்பாக இஸ்லாமிய பெருமக்கள் வாக்களிக்கிறார்களோ, அதுபோல வரும் காலத்திலே தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமிய பெருங்குடி மக்களும் சிறுபான்மை மக்களும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு எங்களது தேசிய ஜனதா கூட்டணிக்கு ஆதரவளிக்கின்ற காலம் வெகு விரைவிலே வந்து கொண்டிருக்கின்றது. 26 சட்டமன்ற பொதுத்தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமையும், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று அனைத்து மக்களுக்குமான ஒரு மக்களாட்சியை தமிழ்நாட்டிலே உறுதியாக தருவோம் என்றார்.

எனக்கு முன்னால் பேசிய அருமை சகோதரர் ஏசிஎஸ் சொன்னார்கள் அண்ணாமலை என்றால் நெருப்பு என்று அவர் எதிரிகளுக்குதான் நெருப்பு, நண்பர்களுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கும் அவர் அகல் விளக்காக அண்ணாமலை தீபம் போன்று இன்றைக்கு விளங்கி வருபவர். ஏதோ கூட்டணி கட்சியை சேர்ந்தவர் என்பதற்காக சொல்லவில்லை, உண்மையிலேயே பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ஒரு சிறந்த மனிதரை, நல்ல மனிதரை, நல்ல படித்தவரை பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக நியமித்திருக்கிறார்கள். இன்றைக்கு திமுக அண்ணாமலை என்றாலே நடுங்குகின்ற அளவிற்கு அவர் செயல்பாடுகள் இருந்து வருகிறது எனக்கூறினார்.
இதையும் படிங்க: “with பழனிசாமியா” “without பழனசாமியா”... எடப்பாடியாருக்கு கெத்தா சவால் விட்ட டிடிவி தினகரன்...!