காரில் வருபவர்களுக்கு பதவி கிடையாது என புஸ்ஸி ஆனந்த் பேசியிருப்பது தவெகவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை கடந்த ஆண்டு தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடத்தி முடித்தார். மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக் கழகம் தயாராகி வருகிறது. இதற்காக, நிர்வாகிகள் நியமனம் தொடர்பான வேலைகள் த.வெ.க.வில் நடைபெற்று வருகிறது.

மாவட்ட வாரியாக பதவிகளை அறிக்கும் ஒவ்வொருமுறையும், தவெகவிற்கு எதிராக அக்கட்சி தொண்டர்கள் போர்க்கொடி தூக்காமல் இல்லை. மாவட்ட இணைச் செயலாளர் பதவிக்கு 5 லட்சம் மாவட்ட பொருளாளர் பதவிக்கு 3 லட்சம் மாவட்ட துணைச் செயலாளர் பதவிக்கு 2 லட்சம் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்களுக்கு தலா 80 ஆயிரம் ரூபாய் என பதவிக்கு தனித்தனியாக விலை வைத்து விற்கப்படுவதாக குற்றச்சாட்டி வருகின்றனர். குறிப்பாக விஜய் நற்பணி மன்றம் இருந்த காலத்தில் இருந்தே உழைத்தவர்களுக்கு பதவி தராமல், நேற்று வந்த பணக்காரர்களுக்கு பதவி கொடுக்கப்படுவதாகவும் தவெக அடிமட்ட தொண்டர்கள் புலம்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக-வில் உட்கட்சி பூசல்... தாடி பாலாஜி சொல்வது என்ன..?

குறிப்பாக இந்த பண வசூல் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்திற்கு தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு ஆதரவாக செயல்படும் சில மாவட்ட செயலாளர்கள் தான் பண வசூலிப்பில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இன்றைய தவெக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான புஸ்ஸி ஆனந்த் பேசியிருப்பது பேசுபொருளாகியுள்ளது.

நான் மாவட்ட செயலாளர்களிடம் அடிக்கடி கூறுவது இதுதான். 2026ம் ஆண்டு தலைவர் தமிழக முதல்வராக அமர்வார் என்பது தெரியாமலேயே நீங்கள் 32 ஆண்டுகளாக போஸ்டர் ஒட்டினீர்கள், கொடி கட்டினீர்கள், நலத்திட்ட உதவிகளை வழங்கினீர்கள். இங்கு அவர்களுக்குத் தான் பதவி வழங்க வேண்டும் என விஜய் உத்தரவிட்டிருக்கிறார். எக்காரணத்தை கொண்டும் காரிலே வருகிறான், அவன் இவனுக்கு எல்லாம் பதவி கிடையாது. மற்ற கட்சிகளில் போஸ்டர் ஒட்டிக்கொண்டிருப்பவர் போஸ்டர் ஒட்டிக்கொண்டே தான் இருக்கணும், நலத்திட்ட உதவிகள் வழங்கிக் கொண்டே அதையே தொடர வேண்டியது தான். ஆனால் பதவியில் மட்டும் அவனோட மாமன், மச்சான், மகன், அண்ணன், தம்பின்னு சொந்தக்காரங்கள் தான் இருப்பாங்க. ஒவ்வொரு தொண்டனுக்கும் பதவி கொடுத்து அழகு பார்த்த ஒரு தலைவர் யார் என்று சொன்னால் அது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தான் என்றார்.

புஸ்ஸி ஆனந்த் இதனைப் பேசும் போது ஆதவ் அர்ஜுனாவும் தான் மேடையில் இருந்த, அதைக் குறிப்பிட்டுள்ள தவெக தொண்டர்கள். கட்சி தாவி வந்த ஆதவ் அர்ஜுனனுக்கு பதவி கொடுக்கும் போது இந்த லாஜிக் எங்கப்போச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: மோடிஜி... தமிழ்நாடுன்னா ஏன் ஜி அலர்ஜி?... மத்திய அரசையும் விட்டு வைக்காத விஜய்...!