மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான ஆண்களும் பெண்களும் புனித நீராடி வருகிறார்கள். இந்த நிலையில் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்ட சிலர், பெண்கள் குளிக்கும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வந்திருப்பதும் அந்த வீடியோக்கள் விற்பனை செய்யப்படுவதும் நாடு தழுவிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து அதிரடி நடவடிக்கையில் இறங்கிய உத்திரபிரதேச மாநில போலீஸ் டிஜிபி, இரண்டு சமூக ஊடக கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுத்து வருகிறார். இது குறித்து கோட்டுவாலி கும்பமேளா போலீஸ் நிலையத்தில் புகார்கள் பதிவு செய்யப்பட்டன. கும்பமேளாவில் பெண்கள் குளிப்பது மற்றும் ஆடை மாற்றுவது போன்ற பதிவுகளை பரப்பும் குறிப்பிட்ட ஊடகங்களை சமூக ஊடக குழு கண்டறிந்து இது அவர்களின் தனி உரிமை மற்றும் கண்ணியத்தை மீறுவதாக மாநில அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இது மகா கும்பமேளா இல்ல... மரண கும்பமேளா.. யோகி ஆதித்யநாத் மீது மம்தா பானர்ஜி ஆவேச தாக்குதல்.!

கடந்த 14ஆம் தேதி அன்று பெண் பக்தர்கள் தொடர்பான ஆபாசமான காட்சிகளை பகிர்ந்ததாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு ஏதும் குற்றம் சாட்டப்பட்டது இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா மற்றும் கணக்கை இயக்குபவர் பற்றிய தகவல்களை வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளனர். தகவல் கிடைத்தது ம் தொடர்ந்து கைது நடவடிக்கை உள்ளிட்ட கூடுதல் மேல் நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் 19ஆம் தேதி அன்று அதாவது நேற்று அது போன்ற படங்களை விற்பனை செய்ததாக கூறப்படும் ஒரு டெலிகிராம் சேனல் மீதும் நடவடிக்கை பாய்ந்து உள்ளது. இதற்கிடையில், தவறான பதிவுகளால் மகா கும்பமேளாவை அவமதிக்க எதிர்க்கட்சிகள் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துக் கொள்ள முடியாது என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்து இருக்கிறார். மகா கும்பமேளாவை மரண கும்பமேளா என்று மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் லாலு பிரசாத் யாதவும் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

"வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பமேளாவை பிரம்மாண்டமானதாக மாற்ற எனது அரசு உறுதி கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் புனித நிகழ்வை சீர் குறைக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். மகா கும்பமேளாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார முக்கியத்துவத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அதற்கு எதிராக தவறான பிரச்சாரத்தை பரப்பி வருகின்றனர்" என்றும் அவர் ஆவேசமாக சாடினார்.

முன்னதாக சட்டமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய எதிர்கட்சிகள், "கும்பமேளாவில்கடந்த 29ஆம் தேதி நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி முப்பது பேர் உயிர் இழந்ததாக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையௌ அரசு குறைத்துக் காட்டுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததே இத்தகைய உயிரிழப்புகள் நிகழ காரணம். இதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்க வேண்டும்" என்றும் வலியுறுத்தி இருந்தன.
இதையும் படிங்க: பலருக்கு விற்கப்பட்ட +1 மாணவி... கொடூரர்கள் கையில் விலங்கு மாட்டிய போலீஸ்... சிக்கியது எப்படி?