தமிழ்நாட்டில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாமல், தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது, அரசுக்கு மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தும் என சீமான் மட்டுமல்ல, திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் போன்றோரே கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இந்திய அரசு நிறுவனங்களில் திட்டமிட்டுத் தமிழர்களைப் புறக்கணித்து, வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களையே 90 விழுக்காட்டிற்கு மேல் பணியில் சேர்க்கிறார்கள். அன்றாடம் ஆயிரம் பல்லாயிரமாய் வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் குவிகின்றனர். கோவை, திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள அமைப்புச்சாரப் பணிகளிலும், பெருமளவு வெளிமாநிலத்தவர்கள் வேலை பார்க்கிறார்கள்.

கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற தொழில் நகரங்களில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் அடுத்துள்ள அனுப்பர்பாளையத்தில் தமிழ்நாட்டு இளைஞர்களை, வட மாநில தொழிலாளர்கள் ஓட ஓட விரட்டியதாக வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியையும், வேதனையும் ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க: பாதியில் மாட்டிய பைக் திருடன்.. விரட்டிப்பிடித்து வெளுத்த பொதுமக்கள்.. பரபரப்பு சிசிடிவி காட்சி..!
திருப்பூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு நிறுவனங்களில், வடமாநிலத்தவர்கள் ஏராளமாக வேலை செய்து வருகின்றனர். மேலும், அங்குள்ள பண்ணைகளிலும் வெளிமாநில நபர்கள் விவசாய பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில், வடமாநில இளைஞர்கள் மது போதையில் இறைச்சிக் கடைக்குள் புகுந்து பொதுமக்களை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
பல்லடம் பேருந்து நிறுத்தம் பகுதியில், சிக்கன் கடைக்குள் புகுந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மதுபானக்கடையில் ஏற்பட்ட தகராறில், கையில் கட்டையுடன் துரத்தி, துரத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், இளைஞர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். 5 பேர் கொண்ட கும்பல், போதையில் இந்த அட்டூழியத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: ரத்தம் சொட்ட சொட்ட மோதிக்கொண்ட இளைஞர்கள்.. போர்க்களமான மயானக் கொள்ளை..!