தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான இருந்த விஜய் திடீரென கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ளதாக கூறினார். அதை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி விழுப்புரம் மாவட்டம் வி.சாலையில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தை நடத்தினார்.

அம்பேத்கர், மணியம்மை, பெரியார், காமராஜர் உள்ளிட்டோரை கொள்கை தலைவர்களாக அறிவித்த விஜய் மறைமுகமாக திமுகவை விமர்சித்தார். பின்னர் சென்னை பனையூரில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் தவெக கட்சிக்காக 120 மாவட்ட செயலாளர்கள் செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. தவெக கட்சியின் வளர்ச்சிகாக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளை நியமித்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எப்போது முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு..? நாள் குறித்த மத்திய அரசு.!
2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என கூறி செயல்படும் விஜய், மகளிர் தினத்தன்று திமுக அரசை நேரடியாக விமர்சித்தார். விஜய்க்கு எதிராக பிற அரசியல் கட்சி தலைவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த சூழலில் நாளை தவெக கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. இதில் தவெக கட்சியின் இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை விஜய் வெளியிட உள்ளதாகவும், அப்போது மாவட்ட செயலாளர்களை சந்திக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கெனவே 95 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் எஞ்சியவர்களின் பட்டியல் நாளை வெளியாகலாம். விஜய்யின் அரசியல் நடவடிக்கைகளால் அவருக்கும் ஆதரவும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. தொடர்ந்து அரசியலில் கவனம் செலுத்தி வரும் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். முழு நேர அரசியலில் ஈடுபடும்போது நடிப்பதை நிறுத்தி விடுவதாகவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: மார்ச்.14க்கு அப்புறம் விஜய்யை நெருங்கவே முடியாது… ஏன் தெரியுமா?