தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தமிழக வெற்றி கழகம் 2026ல் சட்டமன்ற தேர்தலை இலக்காக வைத்து பரபரப்பாக அடியெடுத்து வைத்துள்ளது.அதற்கான பணிகளை மும்மரமாக, முன்னதாகவே தொடங்கி இருக்கின்றனர். முதல் கட்டமாக 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கும் பணி ஜரூராக நடைபெற்று வருகிறது. ஐந்து கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் 95 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அதன் தொடர்ச்சியாக ஆறாவது கட்டமாக 25 மாவட்ட செயலாளர்கள் விரைவில் நியமிக்கப்பட உள்ளனர்.

அதன் பிறகு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மார்ச் மாதம் முதல் வாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடுள்ளார். அடுத்து 2026 சட்டமன்ற தேர்தல் எந்த கட்சியுடன் கூட்டணி வைப்பது என்பது குறித்து முடிவு செய்வார். அடுத்த கட்டமாக அதன் எத்தனை தொகுதிகளை கூட்டணி கட்சிகளிடம் கேட்கலாம் அல்லது விட்டுக்கொடுக்கலாம்.எந்தெந்த தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் அதிகபடியான தொண்டர்களை கொண்டிருக்கிறது. விஜயின் ஈர்ப்பு எந்தப்பகுதிகளில் எப்படி இருகிறது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.
இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்த் மீது சந்தேகம்..! ஆதவ் அர்ஜூனாவை வைத்து கண்காணிக்க உத்தரவு… விஜய் அதிரடி..!
விஜய் கட்சிக்கான ஆலோசனையில் பிரசாந்த் கிஷோர் ஈடுபடுவார் என ஏற்கனவே கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது பனையூரில் இருக்கிற விஜயின் இல்லத்தில் பிரசாந்த் கிஷோர், விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். முன்பிருந்தே தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக ஜான் ஆரோக்கியசாமி இருந்து வருகிறார். தற்போது பிரசாந்த் கிஷோரின் பணி இருக்கும் என்றால் 2026 சட்டமன்ற தேர்தல் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்து மட்டுமே அவர் ஆலோசனை வழங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு அவர் தேர்தல் வியூகம் அத்துக் கொடுத்தார். ஆகையால் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரங்கள் அவருக்கு அத்துபடி என்பதால் இந்த ஆலோசனை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தற்போது 2026 தேர்தலுக்காக ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் பிரசாந்த் கிஷோர் விஜயை இப்போது சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். கூட்டணி அமைப்பது தொடர்பான ஆலோசனை மட்டுமே பிரசாந்த் கிஷோரிடம் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜான் ஆரோக்கியசாமி கட்சியின் ஒட்டுமொத்த நடவடிக்கை எடுக்கும் வியூகத்தை அமைப்பார். அதனை ஆதவ் அர்ஜுனா செயல்படுத்துவார். ஒருவேளை அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எந்தெந்த தொகுதியை கேட்டு பெறுவது? விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் சாதகமாக இருக்கும் என்றெல்லாம் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பு தி.மு.க.மற்றும் அ.தி.மு.க. இரண்டு தரப்பையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!
இதையும் படிங்க: அடிக்கிற அடியில அவன் கதறுனும்... விஜயை அட்டாக் செய்ய சதித்திட்டம் ... லீக்கானது ரஜினி ரசிகர்களின் ஷாக்கிங் ஆடியோ!