முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்த அனைத்து கட்சி கூட்டத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பங்கேற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய அரசு தொகுதி வரையறையை அமல்படுத்துவதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டில் 10 தொகுதிகள் வரை குறைக்கப்படும். ஆனால் உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்கள் தொகை குறையவில்லை.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டால், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்பி-க்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்களின் எண்ணிக்கையும் குறையும். நாடாளுமன்றத்தில் மொத்தமாக உள்ள 543 எம்பி-க்களில் தமிழ்நாட்டில் இருந்து தேர்வான எம்பிக்களின் சராசரி 7.18 சதவிகிதமாகும்.

ஒருவேளை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால், அதன் சதவிகிதம் 5ஆக குறைய வாய்ப்புகள் உள்ளது. மக்களின் குரலாக ஒலிக்கும் தமிழகத்துக்கு நெருக்கடி கொடுக்கவே தொகுதி மறுவரையறை கொண்டு வருவதாக திமுக கூறியுள்ளது. மேலும், தொகுதி மறுவரையறையை கடுமையாக எதிர்க்கும் திமுக அரசு அடுத்தக்கட்டமாக அனைத்து கட்சியின் ஆலோசனையை கேட்டு அதன் மூலம் ஒட்டு மொத்தமாக எதிர்ப்பு தெரிவிக்க முடிவெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: இஃப்தார் நோன்பில் பங்கேற்கும் விஜய் அறிவிப்பு..! ஏன் ப்ரோ இப்படி.? அதிர்ச்சியில் இஸ்லாமியர்கள்..!
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாடு பெரிய அளவில் பாதிப்பை சந்திக்க கூடும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க அனைத்து கட்சி கூட்டத்தையும் கூட்ட முடிவெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அதிமுக, பாஜக, நாதக, தவெக, காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ, தேமுதிக, என அங்கீகரிக்கப்பட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தார். பெரும்பாலான கட்சிகள் இதில் பங்கேற்க முடிவெடுத்துள்ளன. ஆனால, பாஜகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இதில் பங்கேற்பதில்லை என கூறியுள்ளன.

இந்த நிலையில் விஜய்யின் தவெக கட்சி அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. நாளை மறுநாள் நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தவெக பொருளாளர் வெங்கட்ரமணன் பங்கேற்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பை கடுமையாக எதிர்த்து வரும் விஜய் திமுகவுடன் இந்த விவகாரத்தில் இணைந்து போக முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அதிரடியாக மாறிய கூட்டணி... உறுதியானது அதிமுக+ பாமக+ தவெக+ நாதக இணைப்பு… திகிலில் ஸ்டாலின்..!