குட் பேட் அக்லி படத்தில் இடம் பெற்ற சுல்தானா ட்ரெண்டிங் பாடலுக்கு துணை நடிகை உடன் உற்சாகமாக ஆட்டம் போடும் இவர் தான் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் விஷ்ணு. ஊருக்குள் நரி வருவதே தப்பு. அதுவும் ஊளையிட்டுக்கிட்டே வந்தால்.. என்று வில்லன்களை குருவி படத்தில் பந்தாடுவார் விடுவார் விஜய். இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்ஸர் என்ற பெயரில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக விர்சுவல் வாரியர் வில்லங்கமாக பார்ட்டி வீட்டுக்குள் சிக்கி பஞ்சரனாதுதான் கொடுமை.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து ஒரு சேரை போட்டு அமர்ந்து தொண்டை கிழிய கத்தி கூப்பாடு போட்டு நியாயம் சொன்னவர் விஷ்ணு. குஷி படத்திலிருந்து சில இடம்பெற்ற அந்த முக்கிய காட்சியை ரீ கிரியேட் செய்து வீடியோ வெளியிட்டு இருந்தார். வழக்கம்போல வார இறுதியில் பார்ட்டியில் நண்பர்களுடன் ஜில் செய்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருடன் குடித்து கும்மாளமிடும் நண்பரின் தங்கைக்கு வாட்ஸ் அப்பில் காதல் அம்பு விட்டதால் அவருக்கு வம்பு வந்து சேர்ந்துள்ளது. வாட்ஸ் அப்பில் பாலுணர்வை தூண்டும் விதமாக குறும் தகவல் அந்தச் சிறுமிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நாளை நமதே... தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்-ன் பதிவால் பரபரப்பு!!

அந்த சிறுமி அதனை தன் அண்ணனிடம் காண்பித்ததால் அண்ணனின் விழுதுகள் விஷ்ணுவுக்காக காத்திருந்ததாக கூறப்படுகிறது. ஒரே ஒரு முறை மட்டுமே நேரில் பார்த்த அந்த சிறுமிக்கு வாட்ஸ் அப்பில் பாலுணர்வை தூண்டும் விதமாக குறுந்தகவல்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. அந்த சிறுமி அதனை அண்ணனிடம் காண்பித்ததால் அண்ணனின் விழுதுகள் உக்கிரமாகி காத்திருந்தனடர். விஷ்ணுவும் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே தெரியாத மாதிரி அந்த சிறுமியின் வீட்டிற்கு வந்துள்ளார். விஷ்ணுவை முட்டி போட வைத்ததாக கூறப்படுகிறது. அவரது செல்போனை பறித்து அவர் என்னவெல்லாம் சாட்டிங்ஸ் செய்திருக்கிறார் என்பதை வீடியோ எடுத்து எக்ஸ் தலம் மூலம் அம்பலப்படுத்தி இருக்கிறார் அந்த சிறுமியின் சகோதரர்.

சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் சண்டை எப்போதும் உச்சத்தில் இருக்கும். முன்பு விஷ்ணு பேசிய வீடியோ ஒன்றில் அஜித், அரவிந்த்சாமி போன்றவர்களையெல்லாம் ஓடவிட்டு மக்களை தேடி விஜய் அரசியலுக்கு வந்திருப்பதாக உரக்கச் சொல்லி இருந்தார். அதையும் பாரபட்சமின்றி கருத்துக்களால் வறுத்தெடுத்து வருகிறார்கள் அஜித்தின் சிட்டிசன்கள். அரைமணி நேரத்திற்கும் மேலாக முட்டி போட வைத்துக் கொண்டிருந்த போது அவரது பேண்ட் பாக்கெட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த பொருளை (காண்டம்) கண்டதும் காண்டானது அந்த ஜில் ப்ரோ கும்பல்.
வீட்டுப்பாடம் எடுத்த அந்த தாக்குதல் கும்பல் தங்களுடைய முகங்களை மறைத்து விட்டு தாக்கிய காட்சிகளை எடிட் செய்து சாமர்த்தியமாக அவரது வீடியோவை மட்டும் வெளியிட்டிருக்கிறது. இந்த வீடியோவில் விஷ்ணு தான் செய்த தவறுகளை எல்லாம் ஒப்பு கொண்டிருப்பதும், தன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீசாரிடம் அவர் புகார் ஏதும் அளிக்காமல் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தையே மூடிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் சென்னை காவல் துறையினர் இந்த தொடர்பாக விசாரணையை முன்னெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. விஷ்ணு பல்வேறு வீடியோக்களை வெளியிட்டு வந்ததால் அவரது இந்த நடவடிக்கை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.
இதையும் படிங்க: பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்.. நாளை நமதே.. நம்பிக்கை ஊட்டும் விஜய்!!