டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் அசைக்க முடியாத தலைவரான கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஸ் வர்மா, பாஜகவின் புதிய முதலமைச்சராக பொறுப்பு ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியில் 'பாஜகவின் பாகுபலி' என அவருக்கு ஊடகங்கள் பெயர் சூட்டியிருக்கின்றன. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தம் 70 தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இரண்டு முறை ஆட்சி அமைத்த ஆம் ஆத்மி கட்சிக்கு இந்த தேர்தலில் 22 இடங்கள் மட்டுமே கிடைத்து உள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் டெல்லி முதலமைச்சர் அதிஷி இன்று காலை கவர்னர் சக்சேனாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதைத் தொடர்ந்து சட்டசபை கலைக்கப்பட்டது.

புதிய அமைச்சரவை குறித்து கட்சியின் மேலிடம் பரிசீலித்து முடிவு செய்யும் என்று டெல்லி காங்கிரஸ் தலைவர் வீரேந்திர சச் தேவா கூறியிருந்தார். அதன்படி பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா டெல்லி புதிய முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதையும் படிங்க: வரலாம்.. வரலாம் வா..! டெல்லியை அடுத்து பீகாருக்கு குறி வைக்கும் மோட்டா பாய்..! 225க்கு இலக்கு..
இந்த தேர்தலில் கெஜ்ரிவால் மனிஷ் சிசோடியா போன்ற ஆம் ஆத்மி கட்சியின் பெருந்தலைகள் வீழ்ந்து விட்டன. முதலமைச்சர் அதிஷி மட்டுமே தோல்வியில் இருந்து தப்பினார். அதுவும் குறிப்பாக புதுடெல்லி தொகுதியில் கெஜ்ரிவாலை தோற்கடித்த பர்வேஸ் வர்மா தான் முதல்வர் பதவிக்கு வருவார் என்பது ஊடகங்களின் யூகமாக இருக்கிறது.
ஏனென்றால் தேர்தல் பிரசார தொடக்கத்திலேயே கெஜ்ரிவாலுக்கு எதிராக அதிரடி வியூகங்கள் அமைத்து பிரச்சாரத்தை தொடங்கியவர் இவர்தான். அதிலும் இவர் டெல்லியின் முன்னாள் முதலமைச்சரான சாஹிப் சிங் வர்மாவின் மகன் என்பது அவருக்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது.

என்றாலும் பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளைப் பொறுத்தவரை மாநில அளவில் யாரும் எதிர்பார்க்காத அளவில் சில புது முகங்களை முதல்வராக திணிக்கும் பழக்கம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அதன்படி யோசித்தால் யார் யார் அந்த எதிர்பார்ப்பு பட்டியலில் இருக்கிறார்கள் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது.
டெல்லி பாரதிய ஜனதா கட்சி தலைவராக இருந்து வருபவர் வீரேந்திர
சச் தேவா. அவருடைய தலைமையில் தான் இந்த வெற்றியை பாஜக டெல்லியில் பெற்றிருக்கிறது .இந்த நிலையில் அவரும் முதல்வர்.பதவிக்கு உரிமை கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீக்கியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ள மகேந்திர சிங் சிர்சாவின் பேரும் முதல் ஒரு பதவிக்கு பேசப்படுகிறது. முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜயேந்தர் குப்தாழஞ்ச்சம் முதல்வர் போட்டியில் இருக்கிறார்.

பிரபல நடிகராக இருந்து அரசியல் தலைவராக அவதாரம் எடுத்துள்ள மனோஜ் திவாரி பெயரும் முதல்வர் பதவிக்கு அடிபடுகிறது. வடக்கு கிழக்கு டெல்லி எம்பி யாக தற்போது இருந்து வருகிறார் இந்த சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிடவில்லை என்றாலும் முதல்வர் பதவிக்கு தகுதியானவராகவே இவர் கருதப்படுகிறார்.
இந்த முறை ஒரு பெண்ணுக்கு முதல் ஒரு பதவி வழங்க வேண்டும் என்ற கட்சி தலைமை முடிவு செய்தால் ரேகா கூப்டா தேர்வு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாலிமர் பாக் தொகுதியில் முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அ அவர் வெற்றி பெற்றார்.
இதையும் படிங்க: டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது எப்படி?