தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரியை சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் தினேஷ் (வயது 32), மகள்கள் மேனகா (வயது 31), கீர்த்திகா(வயது 29). தினேஷ் இன்ஜினியரிங் பட்டதாரி. சகோதரிகள் இருவரும் அரசுப்பணி தேர்வுக்காக படித்து வந்தனர். இந்நிலையில் அய்யாவு, மதுபாட்டில்களை வாங்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த தினேஷ், தனது தந்தையிடம் மதுபாட்டில்கள் விற்பனை செய்து தர சொன்ன நபர்களிடம் கடந்த 4ம் தேதி தகராறு செய்ததோடு, அவர்களை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்தினருடன் தினேஷ் நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த நடுக்காவேரி போலீசார், அடிதடி வழக்கு விசாரணைக்காக வர வேண்டும் என கூறி தினேசை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு புகார்தாரரும் வந்திருந்தார்.

அப்போது நடந்த பேச்சுவார்த்தையில், புகார்தாரர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனாலும் காவல் ஆய்வாளர் இதை ஏற்காமல் பொது இடத்தில் கத்தியை காட்டி மிரட்டியதாக கூறி வழக்குப்பதிவு செய்து தினேசை புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளார். இதை அறிந்த தினேஷின் சகோதரி மேனகா, கீர்த்திகா காவல் நிலையத்துக்கு வந்தனர்.
அப்போது மேனகா தனக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. அதனால் தனது சகோதரனை விட்டு விடுங்கள் என்று காவல் ஆய்வாளர் சர்மிளாவிடம் கூறி அழுதுள்ளார். ஆனால் காவல் ஆய்வாளர் ஷர்மிளா இருவரையும் சாதி பெயரை சொல்லி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மேனகா, கீர்த்திகா இருவரும் காவல் நிலையம் முன்பு விஷம் குடித்தனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்..! பூட்டிய வீட்டில் நகை திருட்டு.. வாசலில் இருந்த சாவியால் திருடன் ஹாப்பி..!

அதிர்ச்சியடைந்த போலீசார், இருவரையும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கீர்த்திகா இறந்தார். மேனகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவம் அடைந்த உறவினர்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திரண்டனர். கீர்த்திகா உடலை வாங்க மறுத்து, மரணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் சர்மிளாவை சஸ்பெண்ட் செய்ய வலியுறுத்தினர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் சர்மிளாவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்பி ராஜாராம் அதிரடியாக உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கை எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தேசிய ஆதிதிராவிட ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் ரவிவர்மன் தலைமையில் அதிகாரிகள் இன்று சம்பவம் நடைபெற்ற நடுக்காவிரி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சகோதரி மேனகா மற்றும் பிணவறையில் வைக்கப்பட்டுள்ள கிருத்திகாவின் உடல் ஆகியவற்றை சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.
இதையும் படிங்க: 22 மேல் ஆசைப்பட்ட 58? அம்மா, அப்பா கண் எதிரே.. இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்..!