டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை அறிக்கை வெளியிட்டது. இதை அடுத்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட போவதாக பாஜகவினர் அறிவித்திருந்தனர். அதன்படி, சென்னையில் பாஜக-வினர் போராட்டம் நடத்த முயன்ற போது அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போராட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட தலைவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டு மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, பள்ளி குழந்தைகள் போல தமிழக வெற்றி கழகம் அரசியல் செய்கிறது. சினிமா சூட்டிங்கில் நடிகைகளில் இடுப்பை கிள்ளி விஜய் அரசியல் செய்கிறார். நான் களத்தில் நின்று போராடுகிறேன். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் Work from home அரசியல் செய்கிறாரா? அவருக்கு 50 வயதில் தான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தோன்றியதா? 30 வயதில் என்ன செய்தார். திமுகவின் பி டீமாக தமிழக வெற்றி கழகம் இருக்கிறது. படப்பிடிப்பில் இருந்து கொண்டு அறிக்கை அனுப்பும் விஜய்-க்கு மக்களின் கஷ்டத்தை பற்றி என்ன தெரியும். படத்தில் புகை பிடிப்பது, மது குடிப்பது எல்லாம் செய்து டாஸ்மாக் குறித்து பேசுவதற்கு யார் உரிமை கொடுத்தது.
இதையும் படிங்க: கலாய்க்கும் துரைமுருகன்… திமுகவுக்கு எதிராக வெடிக்கும் வேல்முருகன்: ஆட்டி வைக்கிறதா அதிமுக..?

குல்லா போட்டுக் கொண்டு இஃப்தார் விருந்தில் பங்கேற்றால் போதுமா? என்று கடுமையாக விமர்சித்தார். இந்த நிலையில் அண்ணாமலை வைத்த விமர்சனத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிலடி கொடுத்துள்ளார். வரும் மார்ச் 28 ஆம் தேதி சென்னையில் தவெக பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதை அடுத்து திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்து புஸ்ஸி ஆனந்திடம் விஜய் மீது அண்ணாமலை வைத்த விமர்சனம் தொடர்பாக கேள்வி எழுப்ப்பட்டது. அதற்கு பதிலளித்த புஸ்சி ஆனந்த், யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டும். எங்களின் தலைவர் விஜய் வழியில் மக்கள் சேவை செய்கிறோம். அதனால் விமர்சனங்களுக்கோ, மற்றவர்களுக்கோ பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மார்ச் 28ஆம் தேதி தவெக தலைவர் விஜய் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடக்கவுள்ளது. தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டம் என்பதால் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இதில் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள். இதில் சிறப்பு அழைப்பார்கள் யாரும் பங்கேற்கவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சீமானை சந்தித்த விஜயின் வியூக வகுப்பாளர்...! நாதக-தவெக கூட்டணி..?