அனைத்திந்திய அண்ணா திராவிர முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் முதலமைச்சரும் எதிர் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும், நிகழ்ச்சியில், தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக மகளிர் அணியில் மாநில, மாவட்ட மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், செயல் வீராங்கனைகளும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அம்மா உயிரோடு இருந்தா எதிர்ல நிக்க முடியுமா ஒ.பி.ஆர்? உட்கார்ந்தே கும்பிடுவது சரியா? இபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறல்
இந்த நிகழ்ச்சிகள் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, பெண்களுக்கான பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என்றும், தமிழகத்தை அதிகமாக ஆட்சி செய்த பின் ஜெயலலிதா எனவும் தெரிவித்தார்.

மேலும் தொட்டில் குழந்தை திட்டம் என்ற ஒரு அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டிய எடப்பாடி பழனிச்சாமி, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, பாதுகாப்பை வழங்கியவர் என தெரிவித்தார்.
பணிக்குச் செல்லும் பெண்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்டதாகவும், பெண் சிசுக்கொலையை தடுத்து நிறுத்தியதாகவும் கூறினார்.

அம்மா குழந்தைகள் நல பரிசு பெட்டகம், திருமண உதவி திட்டமாக தாலிக்கு தங்கம், பணம் உள்ளிட்டவற்றை வழங்கியதாகவும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவிலேயே ஏழை குடும்பத்தில் பிறந்த பெண்களுக்கும், பாதுகாப்பு கொடுத்த அரசாங்கம் அதிமுக ஆட்சி என தெரிவித்தார்.
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், மகளிர் சிறப்பு அதிரடி படை, கிராமப்புற பெண்களும் பயன்பெறும் வகையில் பறவை மாடுகள் உள்ளிட்டவற்றை வழங்கி கிராமப்புற வளர்ச்சியை ஊக்குவித்தார் என்றும் கூறினார்.

குறிப்பாக பெண்கள் ஏற்றம் பெறுவதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்ததாகவும், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பான விடுதிகள் கொடுக்கப்பட்டது, மகளிர் சுயமாக பொருளாதாரத்தை ஈட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அதிக அளவில் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது என கூறினார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பெண்களைப் பாதுகாக்கும் அரசாங்கமாக இருந்தது என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
இதையும் படிங்க: கூட்டணி இருக்கும்போது 'வேட்டு' அணி எதற்கு..? எடப்பாடியார் போட்ட சபதம்..!