இந்தியாவில் தேர்தலின்போது மக்கள் அதிக அளவில் வாக்களிக்க ஊக்குவிக்கும் நோக்கில் அமெரிக்கா 2.10 கோடி டாலர் நிதியுதவி வழங்கியிருந்தது. இந்த நிதியுதவியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரத்து செய்து சமீபத்தில் அறிவித்தார். அது மட்டுமல்லாமல் இந்தியா போன்ற அதிகவரிதிப்பு நாடுகளுக்கு நிதியுதவி எதற்கு, யாரை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு இந்த நிதியுதவி, இந்தியாவிடம் பணம் அதிகமாக இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில் அமெரிக்க நிதியுதவி குறித்து பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
இதையும் படிங்க: நாடு கடத்தப்படும் 14 லட்சம் இந்தியர்கள்… பேரதிர்ச்சி கொடுக்கத் தயாராகும் அமெரிக்கா..!
இந்தியாவில் ஜனநாயக முறை சிறப்பாக இருக்க, தேர்தல் நடக்க அமெரிக்க நியுதிவதி அளித்தது புதிதாக இருக்கிறது. 1961ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி இந்த நிதியுதவி அமைப்பு உருவாக்கப்பட்டதாக அமெரிக்க அதிபர் கூறுவது முட்டாள்தனமாக இருக்கிறது. அரசு சாரா நிறுவனங்கள், அரசு அமைப்புகளுக்கு அமெரிக்காவின் நிதியுதவி எவ்வளவு தசமஆண்டுகளாகக் கொடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

கடந்த 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடந்த போது, இந்தியாவில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக 55 லட்சம் டாலர்களை அமெரிக்கா நிதியுதவி அளித்தது, 2023ம் ஆண்டில் 61 லட்சம் டாலர்களை வழங்கியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சராசரியாக ஆண்டுதோறும் 45 லட்சம் டாலர்களை அமெரிக்கா நிதியுதவியாக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. 2022ம் ஆண்டில் 46 லட்சம் டாலர்கள், 2021ம் ஆண்டில் 46 லட்சம் டாலர்கள் என கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2.10 கோடி டாலர்களை வழங்கியுள்ளது. ஆனால் அமெரிக்க நிதியுதவியை எந்த தன்னார்வத் தொண்டு நிறுவனம் பெற்றது, மத்திய அரசின் எந்த துறை பெற்றது என்பது குறித்து தெளிவாக மத்திய அரசு தெரிவிக்கவில்லை. வாக்களார்களை தேர்தல்களில் வாக்களிக்க நேரடியாகப் பயன்படுத்தப்பட்டதா என்பதும் தெரியவில்லை.

உண்மையில் கடந்த 4 ஆண்டுகளில் 2.10 கோடி டாலர்கள் உதவி அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்த நிலையில், 1.35 கோடி டாலர்களை மட்டுமே நிதியுதவியாக அமெரிக்கா விடுவித்துள்ளது. பெரும்பாலான நிதியுதவி தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தல் ஆண்டான 2024ம் ஆண்டிலும் வழங்கப்பட்டுள்ளது என தி நியூ இந்தியன்ஸ் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'நிறைய குழந்தைகளை பெற்றுக் கொடு…' இளம்பெண்ணுடன் தனித்தீவில் உல்லாசம்… கர்ப்பமாக்கி ஏமாற்றிய எலான் மஸ்க்..!