டெல்லியை தொடர்ந்து பஞ்சாபிலும் ஆம் ஆத்மி கட்சி கலகலக்க தொடங்கி இருக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் டெல்லியில் அசைக்க முடியாத சக்தியாக ஆம் ஆத்மி கட்சி உருவெடுத்து சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் கொடி கட்டி பறந்தது ஆம் ஆத்மி கட்சி.
சமீபத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட தேசிய அளவில் ஆட்சியை கையில் வைத்திருக்கும். பாஜகவால் ஆம் ஆத்மியை ஒன்றும் செய்ய முடியவில்லை என்றஸ் அளவிற்கு ஆம் ஆத்மி கட்சி வலுவாக இருந்தது. ஆனால் தற்போது வெளியான டெல்லி தேர்தல் முடிவுகளால் அனைத்தும் சுக்கு நூறாகி போனது.

கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவால், மனீஸ் சிசோடியா ஆகியோர் சொந்த தொகுதியில் கூட ஜெயிக்க முடியாமல் மண்ணைக் கவ்வினர். பல அமைச்சர்களும் இந்த தேர்தலில் தோற்றுப் போனார்கள். பல வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர் இதனால் ஆம் ஆத்மி கட்சியின் செல்வாக்கு படு பாதாளத்திற்கு சென்று விட்டது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க: டெல்லியில் 26 ஆண்டுகளுக்குப்பின் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது எப்படி?
இந்த நிலையில் தான் தற்போது ஆம் ஆத்மி ஆளும் மற்றொரு மாநிலமான பஞ்சாபில் தற்போது பிரச்சனைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. பகவந்த் மான் தலைமையிலான பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சியில் உள்ள 30 எம் எல் ஏக்கள் தற்போது காங்கிரஸ் பக்கம் தாவ திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளி வரத் தொடங்கியுள்ளன.

30 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சிக்கு தாவினால் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். எனவே அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையை சரி செய்யவும் நிலைமையை சமாளிக்கவும் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லியில் இருந்து 11ஆம் தேதி அதாவது நாளை பஞ்சாப் செல்கிறார்.
அங்கு அதிருப்தியில் இருக்கும் எம்எல்ஏக்கள் மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்து சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார் என்றும் தெரிகிறது.
வரும் 2027 ஆம் ஆண்டு வரை பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் தலைவர்கள் பஞ்சாபிலேயே தங்கி முகாமிட்டு பிரச்சினை சரி செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 6 தொகுதிகளில் 'ஆம் ஆத்மி' கட்சி வெற்றி