பிப்ரவரி 21-ந் தேதியான இன்று உலகத் தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து செய்தி ஒன்றை விடுத்துள்ளார். அதில்
எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி
இலக்கியங்களில் புதைந்திருந்த வரலாற்றினை
மண்ணில் அகழாய்ந்து நிறுவி வருகிறோம்
அகத்திலும், புறத்திலும் அன்பும் வீரமும் கொண்டு வாழும்
நற்றமிழர் தாய்மொழி, போற்றதலுக்குரிய பழமை உடைய
மொழி மட்டுமல்ல, பிறமொழித் துணையின்றி
தனித்து இயங்கும் ஆற்றல் கொண்ட செம்மொழி
உலகெங்கும் பரவட்டும் நம் உயர்தனிச் செம்மொழி..
என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் அண்ணாமலையின் எக்ஸ் தள பதிவில்,
அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும் விதமாக, சர்வதேச தாய்மொழி தினம் 2000-ம் ஆண்டிலிருந்து பிப்ரவரி 21-ந் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. நம்முடைய எண்ணம், படைப்பாற்றல் தாய்மொழி வழியாகவே நடக்கிறது. மனிதன் பேசும் மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டால் சிந்தனைத் திறன் பெருகும். ஆகையால் அடிப்படைக் கல்வி என்பது தாய்மொழியில் கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம்.
இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்றது ஏன்? - அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன் விளக்கம்...!

இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். இதுமட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தாய்மொழி தினத்தையொட்டி தங்கள் வாழ்த்துச் செய்தியை கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் பேச்சுக்கு கொந்தளித்த பா.ரஞ்சித்...! அப்படி என்ன தான் சொல்லிட்டாரு நம்ம முதல்வர்..!