கட்சியை விட்டுப் போனவர்கள் எப்படிப்பட்ட நிலைமைக்கு போனார்கள்... காணாமல் போய்விட்டார்கள். இப்படி நடந்து கொள்வது அநாகரிகமான செயல்'' என செங்கோட்டையனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்.

எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் மோதல் குறித்த்டு கருத்து தெரிவித்துள்ள அவர்,''இது தனிப்பட்ட விஷயம் என்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார். செங்கோட்டையன் சட்டமன்ற கூட்ட நிகழ்வுக்கு அதிமுக கூடிய கூட்டத்திற்கு வரவில்லை என்று அவரிடம் தான் கேட்க வேண்டும். அதிமுக என்பது தொண்டர்களால் இயக்கப்படுகிற ஒரு இயக்கம். தொண்டர் தொடங்கிய இயக்கத்தில் தான் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் இணைத்து கொண்டார் என்று வரலாறு உண்டு.
இதையும் படிங்க: எடப்பாடியாருடன் மோதல்... 'என் லட்சியம் உயரமானது': செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு..!

அப்படி தோன்றிய இயக்கத்தை 50 ஆண்டுகளுக்கு அழைத்து வந்தவர் புரட்சி தலைவர் அம்மா ஜெயலலிதா. எடப்பாடி பழனிச்சாமி நான்கு வருட காலம் ஆட்சி நடத்தி இருக்கிறார். இப்போது நான்கு வருடங்கள் எதிர்க்கட்சி என்ற நிலையிலும் இன்று அதிமுகவை நடத்தி வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் ஒன்று இரண்டு பூசல்கள் இருக்கும். கசப்புகள் இருக்கும், மன வேறுபாடுகள் இருக்கும். கட்சியை விட்டுப் போனவர்கள் எப்படிப்பட்ட நிலைமைக்கு போனார்கள்... காணாமல் போய்விட்டார்கள். இப்படி நடந்து கொள்வது அநாகரிகமான செயல்'' என ஆவேசப்பட்டுள்ளார்.

''நான் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். சீமானை போல் பேச முடியாது. அளந்து பேச வேண்டிய சூழலில் இருக்கிறேன். இக்கட்டான சூழலில் சில விஷயங்களை வெளிப்படையாக பேச முடியாது. எந்தப்பாஅதை சரியாக இருக்கிறதோ அந்தப்பாதையில்தான் சென்று கொண்டு இருக்கிறேன். என் லட்சியம் உயரமானது. என்றாலும் சில வேடிக்கை மனிதர்களை போல வீழ்ந்து விட மாட்டேன். நான் போகும்பாதை சரியானது, முறையானது'' எனத் தெரிவித்து இருந்தார் என அதிமுக எம்.எல்.ஏ செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆக, அரசல் புரசலாக வெளிப்பட்டு வந்த மோதல் அதிமுகவுக்குள் பூதாகரமாக வெளிப்பட்டு விட்டது.
இதையும் படிங்க: ஈரோடு டூ ஜெயலலிதா சமாதி..! எடப்பாடியாருக்கு எதிராக போர்க்கொடி.. தர்மயுத்தத்திற்கு தயாராகும் செங்கோட்டையன்..?