அதிமுகவில் பிரிந்து கிடக்கும் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

திருப்பத்தூரில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளதா என்பது அவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ஆனாலும், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவின் மூத்த நிர்வாகி. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டவர் செங்கோட்டையன் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இதையும் படிங்க: டாஸ்மாக் ரூபத்தில் திமுகவுக்கு காத்திருக்கும் ஆப்பு... அடித்துச் சொல்லும் அதிமுக மாஜி அமைச்சர்...!

தற்போது அதிமுகவில் உள்ள சக்திகள் பிரிந்துள்ளன. அந்த சக்திகள் அதிமுகவில் ஒன்று சேர்ந்து 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலைச் சந்திக்க வேண்டும். அப்படிச் சந்தித்தால் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். இது நடைபெற வேண்டும் என்றால், பிரிந்து கிடக்கும் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேரவேண்டும். அது நடந்தால் மட்டுமே அடுத்த ஆண்டு நடைபெற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.சென்னையில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் ரூ.1,000 கோடி முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு திமுக அரசுக்கு உள்ளது” என்று ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி.. ஆதரவு -63, எதிர்ப்பு - 154 வாக்குகள் பதிவாகின..!