அரசுக்கு எதிராக கண்டிக்கவும் தெரியும், போராடவும் தெரியும் , எங்கள் தனித்துவத்தை ஒருபோதும் இழந்ததில்லை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் , அம்பேத்கர் பெயரை உச்சரிப்பது ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது அதனால் அம்பேத்கர் பெயரை ஆயிரம் முறை லட்சம் முறை உச்சரிக்கும் போராட்டம் நடத்தப் போகிறோம் என்று தெரிவித்தார்
கூட்டணியில் இருப்பதால் சுய தன்மையை இழந்து விடுவதா என அன்புமணி ராமதாஸ் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன் , நாங்கள் அமைதி காக்கவில்லை அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம் , போராட வேண்டிய இடத்தில் போராடுகிறோம் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிக்கிறோம் எங்களுடைய தனித்துவத்தை ஒரு பொழுதும் இழந்தது இல்லை அதற்கான சூழலும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்
இதையும் படிங்க: பெட்டி பெட்டியாய் வைத்தும் குட்டிப்பையன் வைத்த ஆப்பு... கென்யாவில் பொடியனை ஹீரோவாக்கிய அதானி..!
தொடர்ந்து பேசிய திருமாவளவன் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது நகைப்பிற்குள்ளாகி இருக்கிறது என்று தெரிவித்தார் .
இதையும் படிங்க: ‘திருமா ஏன் இப்படி திமுகவின் கொத்தடிமை ஆனார்..?’- சிறுத்தையை கதறவிடும் அண்ணாமலை குரூப்..!