டபிள்யூ.பி.எல்லில் 90’ஸ்-களின் ஹீரோவாக விளங்கியவர் அமெரிக்க மல்யுத்த வீரர் ஜான்சீனா. இவருக்கு உலகம் முழுவதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இங்கிலாந்தின் மாசசூசெட்ஸில் பிறந்த இவர், தனது குழந்தைப் பருவத்தை நியூபரிபோர்ட் மற்றும் சாலிஸ்பரி கடற்கரை அருகே உள்ள ஒரு சிறிய நகரில் கழித்தார். பின்னர் அவர் தனது இருபதுகளில் நியூ இங்கிலாந்தில் இருந்து ஃப்ளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார். டபிள்யூ.பி.எல்லில் முன்னணி வீரர் ஆனா அவருக்கு அதிக சூரிய ஒளி காரணமாக தோல் புற்றுநோய் ஏற்பட்டது.

இது குறித்து அவர் பேசுகையில், பாதுகாப்பு இல்லாமல் அதிகமாக சூரிய ஒளியில் இருந்ததால், இந்த நோய் எனக்கு வந்துவிட்டது. ஆம், தோல் தொடர்பான சோதனையை செய்த போது, எனது வலது இடுப்பு எழும்பில் இருந்து புற்றுநோய் கட்டி இருப்பதை தோல் நோய் மருத்துவர் கண்டுபிடித்தனர். பின்னர் அது நீக்கப்பட்டது. ஆனாலும், அதன் பிறகு மருத்துவர் மீண்டும் சோதனை செய்ய சொன்னார். எனக்கு அந்த மாதிரியான தோல் சிகிச்சை நிபுணர் கிடைத்ததில் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன்.
இதையும் படிங்க: கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி காலமானார்..!

தோல் புற்றுநோய் புள்ளிவிவரங்கள் அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும், தனிப்பட்ட அனுபவங்கள் அபாயத்தை அதிக உண்மையாக உணர வைக்கின்றன. முதல் சிகிச்சைக்கு முடிந்து ஒரு வருடம் கழித்து, வலது தோளுக்கு அருகில் இருந்த மற்றொரு கட்டியையும் மருத்துவர் நீக்கினர். WWE பார்க்கும் நபர்களுக்கு அது தெரியும். உடல்நல பிரச்சினைகளை எதிர்கொண்ட போது என்னுடைய மனநிலை மோசமான சூழ்நிலைக்கு சென்றது.

ஆனால் தோல் நோய் சிகிச்சை நிபுணர் கவனிப்பாலும், என்னை நான் அர்ப்பணிப்புடன் பார்த்துக்கொண்டதாலும், என்னால் பாசிட்டிவான மனநிலையை உருவாக்க முடிந்தது. நான் இன்று என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் இடத்திற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஆனால், எப்போதும் என் மனதில் தினமும் நீ உன்னை பாதுகாத்துக்கொள்ள சில நொடிகள் அதிகமாக செலவு செய்ய வேண்டும் என்பது ஓடிக்கொண்டே இருக்கும் என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டியை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இதையும் படிங்க: ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புற்றுநோய் ஆபத்து அதிகம்... ஐசிஎம்ஆர் எச்சரிக்கை..!