விஜய் கட்சியில் ஆதவ் அர்ஜூன் அரசியல் ஆலோசகராக இணைந்திருப்பது தான் இப்போது ஹாட் டாபிக் என்றால் தெவெகவில் இருக்கும் சில முக்கிய நிர்வாகிகளுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தவெககவில் விஜயை விட கோலோச்சிய புஸ்ஸி ஆனந்த - ஜான் ஆரோக்கியசாமியின் மோசமான நடத்தைகள், செயல்பாடுகளே ஆதவ் அர்ஜூனை தவெகவுக்குள் கொண்டு வந்துள்ளது என்கிறார்கள் அரசியல் ஆய்வாளர்கள்.
விஜயும், ஆதவ் அர்ஜுனும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு மணி நேரம் சந்தித்துப் பேசினர். அடுத்து திங்கட்கிழமை நடைபெறுவதாக இருந்த நிர்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டு நேற்று நிர்வாகி பட்டியலை அறிவித்தார் விஜய். இந்நிலையில் இன்று விஜயின் பட்டினப்பாக்கம் வீட்டில் விஜயை சந்தித்த ஆதவ் அர்ஜுன் தவெகவின் அரசியல் ஆலோசகராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அந்த ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

அந்த நிகழ்வின்போது விஜயிடம் இடம் பல தகவல்களைப் புள்ளி விவரங்களோடு பகிர்ந்திருக்கிறார் ஆதவ் அர்ஜூன். விஜயை சந்தித்த பிறகு தவெக நிர்வாகிகள் சிலரை அழைத்தும் பேசியிருக்கிறார் ஆதவ் அர்ஜுன். விஜயால் கவனிக்க முடியாத சில விஷயங்களை தீர்க்கும் நபராக ஆதவ் அர்ஜுன் இருப்பார் என நம்பப்படுகிறது. விஜயை ஆதவ் அர்ஜுன் சந்தித்தித்து விடக்கூடாது. விஜயை அவர் நெருங்கக் கூடாது என சிலர் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டுள்ளனர். ஆகையால் வேண்டுமென்றே அதிமுகவில் ஆதவ் இணைகிறார்' என்று தவெக நிர்வாகிகளே அவ்வப்போது விஜயிடம் கூறி வந்திருக்கிறார்கள். அதிமுகவில் இணைய போகிறார் என்று விஜய் இடமே கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: விஜயுடன் கைகோர்க்கும் ஆதவ்.. ஜான் ஆரோக்கியசாமிக்கு கல்தா..? மாஸ்டர் ஸ்கெட்ச் போட்ட விஜய்..!

ஒரு கட்டத்தில் இதையெல்லாம் பொய் என்று தெரிந்து கொண்ட விஜய், தன்னுடன் இருக்கும் நிர்வாகிகள் சரியில்லை என்பதையும் உணர்ந்து இருக்கிறார். ஆகையால் ஒரு கட்டத்தில்ல் ஆதவ் அர்ஜுனை நேரடியாக அழைத்த விஜய், ''இப்போதைக்கு நீங்கள் அரசியல் ஆலோசராக தவெக இணைந்திருங்கள்'' எனக் கூறியுள்ளார். சிலரை முழுமையாக ஆரம்பத்தில் இருந்தே நம்பி வந்த விஜய் ஒரு கட்டத்தில் அவர்களை நம்பி தாம் ஏமாற்றப்படுவதாகவும், ஏற்கனவே இருக்கும் நிர்வாகிகள் தெளிவாக இல்லை என்பதையும் தாமதமாகவே உணர்ந்து கொண்டுள்ளார் விஜய்.
ஆடியோ விவகாரம், உட்கட்சி விவகாரங்களை அந்த நிர்வாகிகளால் சரியாக கையாள முடியவில்லை.விஜய் பரந்தூர் செல்லக்கூடாது என்று ஜான் ஆரோக்கியசாமி பேசியது, விஜயை காளியம்மாள் வந்து சந்தித்து விட்டுப்போனதாக சீமானிடம் போய் சொல்வது... மற்ற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு தவெகவில் பதவி இல்லை என்று புஸ்ஸி ஆனந்த் விரட்டி விடுவது.. மீறி வந்தாலும் விஜயை சந்திக்க விடாமல் செய்வது... இப்படியாக பல விஷயங்கள் இருக்கும்பொழுது அதை சரி செய்வதற்காக ஆதவ் அர்ஜுன் சரியான ஆளாக இருப்பார் என்று விஜய் உணர்ந்திருக்கிறார். தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விஜயிடம் எந்த விவகாரங்களையும் கலந்து ஆலோசைப்பது இல்லை. கட்சியின் நிர்வாகத்தை பார்ப்பவர் அவராகத்தான் இருந்தார். அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமியும் கட்சியில் நடக்கும் விவகாரங்கள் எப்படி இருக்கிறது? அதை இப்படி கையாள வேண்டும் என்று விஜய்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.

இந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு ஜான் ஆரோக்கியசாமி ஆடியோக்களை ரிலீஸ் பண்ணிக் கொண்டிருந்தார். இன்னும் பத்து, பதினைந்து ஆடியோக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். அது அடுத்தடுத்து வெளிவரலாம். அல்லது வெளிவராமல் கூட போகலாம். அந்த ஆடியோவை ஜான் ஆரோக்கிய சாமியை வெளியிட்டாரா அல்லது வேறு யாரோ விட்டார்களா என்பது இரண்டாவது விஷயம். ஆனால், அந்த ஆடியோவில் பேசியது ஜான் ஆரோக்கியசாமி தான். அதை அவரும் மறுக்கவில்லை. ஆகையால் புஸ்ஸி ஆனந்த்- ஜான் ஆரோக்கிய சாமி இருவருமே சொதப்புவதாக விஜய்க்கும் தெரியந்திருக்கிறது. ஆக, இரண்டு பேரும் சரியில்லை. இரண்டு பேரின் வேலையையும் சேர்த்து ஆதவ் அர்ஜுன் சரியாக முடிப்பார். கட்சி நிர்வாகிகள் சொல்லும் பிரச்சினைகளை ஆதரித்து நேரடியாக விஜயிடம் எடுத்துச் செல்வார்.
இப்போது விஜய்க்கு நேரடியாக விஷயங்களை எடுத்துச் செல்லாத புஸ்ஸி ஆனந்த- ஜான் ஆரோக்கியசாமி வேலைகளை நேரடியாக ஆதவ் அர்ஜுன் எடுத்துச் செல்வார். ஜான் ஆரோக்கியசாமியைப் பொருத்தவரை அவரை சமூக வலைதளங்களை மட்டும் நிர்வாகியுங்கள் என்று விஜய் கூறியுள்ளார். ஏனென்றால் பிரச்சினைகளை சரி செய்வதில் அவர் சுணக்கம் காட்டியிருக்கிறார்.

அடுத்தபடியாக பூத்கமிட்டி ஆட்களை நியமிப்பதில் அனுபவம் வாய்ந்தவர் ஆதவ் அர்ஜுன். தற்போது தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு அடுத்து அதிக பூத் கமிட்டிகளை வைத்திருப்பது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அதற்கு முக்கிய காரணம் வகித்தவர் ஆதவ் அர்ஜுன். திமுக-அதிமுகவைப் போலவே தவெக பூத் கமிட்டி ஆட்களை 234 தொகுதிகளிலும் உருவாக்க வேண்டும் என்று விஜய் விரும்புகிறார். அதற்கு சரியான நபராக அர்ஜுனை தேர்ந்தெடுத்துள்ளார்.
இன்னொரு விவகாரமே இதில் இருக்கிறது. சில முக்கிய நிர்வாகிகள் விஜயிடம் சென்று தமிழகத்தில் நமக்கு 35 சதவிகிதம் வாக்குகள் இருக்கிறது என்று பொய் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், 8 முதல் 9 அதிகபட்சம் போனால் 10% தொடலாம் இதுதான் கள எதார்த்தம் என வெளிப்படையாக கூறி இருக்கிறார் ஆதவ் அர்ஜூன். வாக்கு சதவீதத்தை உயர்த்த என்னென்ன செய்ய வேண்டும் என்பதையும் விலாவாரியாக விஜயிடம் தெரிவித்திருக்கிறார். ஆகையால் ஆதவ் அர்ஜுன் வந்த பிறகு தவெக அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே புஸ்ஸி ஆனந்த் பணம் வாங்கிக் கொண்டுதான் நிர்வாகிகளை நியமிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் நான் சொல்லும் நிர்வாகிகளை நியமியுங்கள் என புஸ்ஸி ஆனந்திடம், ஜான் ஆரோக்கியசாமி சண்டை போட்டதாகவும் தகவல் இருக்கிறது. அதையொட்டிதான் அந்த ஆடியோக்கள் லீக் ஆனதாக கூறப்படுகிறது. ஆகையால் ஜான் ஆரோக்கிய சாமி- புஸ்ஸி ஆனந்த் இவரும் அடித்துக் கொண்டிருக்கும் போது விஜய்க்கு எந்த தகவலும் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது. விஜயும் கட்சிக்குள் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் அவர்கள் இருவரும் வைத்து இருந்திருக்கின்றனர். ஆகையால் அரசியல் களத்தை தெரிந்த இவர்கள் இருவரையும் விட சிறப்பான ஒரு நபர் ஆதவ் அர்ஜுன் என்பதை உணர்ந்தார் விஜய்.
அவர்கள் இருவருடைய வேலையையும் ஒரே ஆள் பார்க்கக் கூடிய இடத்தில் இப்போது ஆதவ் அர்ஜூனை நியமித்துள்ளார் விஜய். ஆதவ் அர்ஜூனுவின் தவெக வருகை அதிமுக- தவெக- விசிக கூட்டணி அமைய வழிவகுக்கும். அல்லது தவெகவுடன் விசிக- காங்கிரஸ் போன்ற கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வர முயற்சி எடுப்பார்.

மொத்தத்தில் திமுகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை தவெகவுக்கு கொண்டு வருவார் என விஜய் எதிர்பார்க்கிறார். ஆகையால் 2026 ஆம் ஆண்டு நடைபெற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணியை உருவாக்குவார் ஆதவ் அர்ஜூன் என்கிற எதிர்பார்ப்பும் இப்போது எழுந்துள்ளது.
இதையும் படிங்க: விஜயுடன் இணைந்த ஆதவ் அர்ஜூன்… கூட்டணி வைத்த குருமா… வெளியே சிரித்து, உள்ளூர வருத்தப்படும் திருமா..!