கடந்தை நடந்த ஈரோடு கிழக்குத் தொகுதியில் ஓபிஎஸ் அணி கிச்சுக் கிச்சு மூட்டும் வகையில் ரெடிமேட் வேட்பாளரை நிறுத்தி வாபஸ் வாங்கியதை நினைவிருக்கிறதா..? இப்போது எடப்பாடி அணியில் அதே செந்தில் முருகன் தான் இந்த ஈரோடு இடைத்தேர்தலில் இபிஎஸுக்கு கிச்சு கிச்சு மூட்டும் ஒரு வேலையை சத்தமில்லாமல் செய்திருக்கிறார்.
திமுக ஆட்சியில் இருப்பதால் ஜனநாயக முறையில் தேர்தல் நடக்காது என்பதால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்திருந்தது. அதே காரணங்களை சொல்லி திமுகவிற்கு எதிரான கட்சிகள் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணித்தன. இதனால் நாம் தமிழர் கட்சி- திமுக இடையே நேரடி மோதல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அதிமுக
பிரமுகர் ஒருவர் சுயேட்சையாக களமிறங்கி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது பரபரப்பை கிளப்பி உள்ளது.

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 4 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதிமுக பிரமுகரான செந்தில் முருகனும் சுயேட்சையாக தாக்கல் செய்திருந்த வேட்பு மனுவும் ஏற்கப்பட்டுள்ளதால் இதுவரை மொத்தம் 55 பேரின் வேட்பு மனுக்கலள் ஏற்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: விஜயின் தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சர்..! அப்படியே வருவாரா..? அறுத்து விட்டு வருவாரா..?
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். 2023ல் நடந்த இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணியின் வேட்பாளராக யாரும் எதிர்பாராத வகையில் தீடீரென அறிவிக்கப்பட்டவர் செந்தில் முருகன்.
எடப்பாடி பழனிசாமி அணியில் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், அதே நாளில் ஓ.பன்னீர்செல்வம் தனது அணியின் வேட்பாளராக செந்தில் முருகனை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அணியில் எந்தப் ப்தவியிலும் இல்லாதபோது அவரை எப்படி வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற விவாதம் எழுந்தபோது, அவசர அவசரமாக செந்தில் முருகனுக்கு கட்சியின் அமைப்புச் செயலாளர் என்கிற பதவியை இன்ஸ்டாண்டாக அறிவித்தார் அவரது தானைத் தலைவர் ஓ.பி.எஸ். இதனையடுத்து பாஜக தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதால், செந்தில் முருகன் போட்டியிலிருந்து வாபஸ் பெறுவதாக அறிவித்தார் ஓபிஎஸ்.

இடைத்தேர்தல் முடிந்து. காட்சிகள் மாறின. அதே சூட்டோடு அணி விட்டு அணி தாவினார் செந்தில் முருகன். நேராக எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குச் சென்ற செந்தில் முஉருகன் அவரது அணியில் ஐக்கியமாகி ஓ.பி.எஸுக்கோக் கொடுத்தார். இப்போது அதே செந்தில் முருகன் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து கொண்டு சுயேட்சை வேட்பாளராக மௌ தாக்கல் செய்துள்ளார். அவரது னுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. திமுக- நாதக இடையே நேரடி போட்டி நிலவும் நிலையில், அதிமுக பிரமுகர் சுயேட்சையாக களமிறங்கி இருக்கும் செந்தில் குமார் தனது வேட்பு மனுவை வாபஸ் பெறுவாரா? இல்லை சுயமாக களம் காண்பாரா என்பது நாளை மறு நாள் உறுதியாகி விடும். காரணம் வேட்பு மனுவை வாபஸ் பெற நாளை மறுநாள் வரை அவகாசம் உள்ளது.
ஒருவேளை கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செந்தில் முருகன் வேட்பாளராக தொடர்ந்தால்... தன்னை அறிமுகப்படுத்திய ஓ.பி.எஸ். அணியினர் வந்து முட்டுக் கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பாரோ..?
இதையும் படிங்க: 'விஜயால் அதிமுகவுக்கு பலம்..! சிவகாசியில் கூட்டணி வெடியை பற்ற வைத்த எடப்பாடியார்..?