அமெரிக்க அதிபராக இருக்கும் டிரம்ப் தான் பதவியேற்றது முதல் பல முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதில் மிகவும் முக்கியமானது வரி விதிப்பு. அதாவது அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் விதிக்கும் வரிக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் அதே சதவீத வரியை அந்தந்த நாடுகளுக்கு விதிப்பதுதான். அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகளில் அதிக வரி விதிப்பதாக கூறிய டிரம்ப், இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக தெரிவித்து இருந்தார்..

அதன்படி இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீது வரி விதித்தார். இதனிடையே வரி விதிப்பை நிறுத்தி வைக்கப்பதாக கூறிய அவர், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரி மட்டும் நீடிக்கும் என்று திட்டமிட்டமாக தெரிவித்துவிட்டார். மேலும் சீனா மீது கூடுதலாக வரி விரிப்பையும் அறிவித்தார். இதற்கு சீனாவும் பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 145 சதவீத வரி விதி விரிப்பை அறிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்காவில் உணரப்பட்ட நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்..!

இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் வரியை 125 சதவீதமாக சீனா உயர்த்தியது. இதனால், வர்த்தகப்போர் உச்சமடைய, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரியை 245 சதவீதமாக அமெரிக்கா உயர்த்தியுள்ளது. 145 சதவீதமாக இருந்த வரி தற்போது 245 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையில் நேரடியாக எதிரொலித்துள்ளது. காலை முதல் ஏற்றத்துடன் வர்த்தகமான இந்திய பங்குச்சந்தை தற்போது கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: 145% வரிவிதிப்பில் சிக்கிய சீனா.. கூடுதல் வரி விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொக்கரிப்பு..!