பில் கேட்ஸின் சுற்றுப்பயணத்தின் போது அவர் நாடாளுமன்றத்திற்கும் வருகை தந்தார், அங்கு தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சுகாதாரம், விவசாயம் மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் போன்ற முக்கிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இந்தியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் கூட்டாண்மையை அவரது சந்திப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.
அந்த வகையில் முன்னதாக பில் கேட்ஸ், இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டாவை நாடாளுமன்றத்தில் சந்தித்தார். நட்டாவுடனான சந்திப்பின் போது, சுகாதாரத் துறையில் இந்திய அரசுக்கும் கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையேயான தற்போதைய கூட்டாண்மைகள் குறித்து பில் கேட்ஸ் ஆலோசித்தார். இந்தியாவில் தாய்வழி சுகாதாரம், நோய்த்தடுப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான அறக்கட்டளையின் முயற்சிகளை நட்டா பாராட்டினார்.

அதை தொடர்ந்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுவை இன்று டெல்லியில் பில் கேட்ஸ் சந்தித்து பேசினார். அப்பொது, சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் மேம்பட்ட சேவை வழங்கலை இயக்க செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வுகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து சந்திரபாபு நாயுடுவுடன் கேட்ஸ் விவாதித்தார்.
இதையும் படிங்க: மார்ச் 20-ல் பிஜேபிக்கு புதிய தலைவர்..! அனுராக் தாக்கூரா? சிவராஜ் சிங் சவுகானா? கடும் போட்டி

இந்த சந்திப்பு குறித்து சந்திரபாபு தனது தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், பில் கேட்ஸுடனான சந்திப்பு மிக சிறப்பானதாக அமைந்தது. ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சிக்காகவும், மாநில மக்களின் நலனுக்காகவும் ஆந்திர அரசும், கேட்ஸ் அறக்கட்டளையும் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசித்ததாக தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர அரசுக்கும், கேட்ஸ் அறக்கட்டளைக்கும் இடையே, கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் பங்கெடுப்பு தொடர்பாக ஒப்பந்தம் கையெழுத்தானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், கல்வி, விவசாயம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பிற துறைகளில் சேவைகளை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் முன்கணிப்பு பகுப்பாய்வு போன்ற நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விவாதித்ததாகவும் சந்திரபாபு தெரிவித்துள்ளார். ஸ்வர்ணந்திரா பிரதேசம்-2047 தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஆந்திர அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

இந்த இலக்கை அடைவதிலும் ஆந்திர மக்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் கேட்ஸ் அறக்கட்டளையுடனான கூட்டாண்மை முக்கிய பங்கு வகிக்கும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்காக தனது நேரம், யோசனைகள் மற்றும் ஆதரவை நன்கொடையாக வழங்கிய பில் கேட்ஸுக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'தாய்மொழிக்கே முக்கியத்துவம்… இந்தியும் தேவை..' மும்மொழிக் கொள்கைக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு..!