சிட்டிகுரூப் வங்கி, வாடிக்கையாளர் கணக்கில் 284 டாலர் வரவு வைப்பதற்குப் பதிலாக 81 லட்சம் கோடி டாலரை வரவு வைத்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தவறு இப்போது நடக்கவில்லை, கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. பிப்ரவரி 28ம் தேதிதான் தெரிந்துள்ளது என தி பைனான்ஸியல் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தவறுகளை இரு வங்கி ஊழியர்களும் கவனிக்காமல் விட்டுள்ளனர், இந்த பணம் வரவு வைத்தபின் 3வது ஊழியர் சரிபார்க்கும்போதுதான் 90 நிமிடங்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் வங்கிக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை, அதேசமயம், இந்த வங்கியில் ஏற்பட்ட தவறு குறித்து பெடரல் ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கும், கரன்சி கட்டுப்பாட்டுத்துறைக்கும் வங்கிசார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் பிரேசில் நாட்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. ஏனென்றால் வாடிக்கையாளர் பிரேசில் நாட்டவர் என்பதால் தனது கணக்கில் இருந்த 284 டாலர்களை எடுக்க முயன்றபோது அவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியவில்லை.

இது குறித்து அந்த கணக்குதாரர் வங்கியில் புகார் அளிக்கவே, காசாளர் அந்த வாடிக்கையாளரின் கணக்கை ஆய்வு செய்தபோது, அதில் 81 லட்சம் கோடி டாலர்க்ள் வரவு வைக்கப்பட்டிருந்தது கண்டு அதி்ர்ச்சி அடைந்தார். அது மட்டுமல்லாமல் தான் மட்டும் ஆய்வு செய்யக்கூடாது என்பதோடு 2வது ஊழியரையும் வரவழைத்து இந்த கணக்கை சரிபார்க்க காசாளர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!
3வது ஊழியரும் வரவழைக்கப்பட்டு அந்த கணக்கை ஆய்வு செய்தபோதுதான் கணக்கில் தவறுகளாக 81 லட்சம் கோடி டாலர் வரவு வைக்கப்பட்டிருந்தது என்பதை 90 நிமிடங்களுக்குப்பின் உறுதி செய்தனர். அதன்பின் அந்த தவறு சரி செய்யப்பட்டு பணம் வங்கிக்கு மாற்றப்பட்டது.

இருப்பினும் இந்தத் தவறு குறித்து பெடரல் ரிசர்வ் வங்கிக்கு, சிட்டிகுரூப் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. 2024ம் ஆண்டில் மட்டும் சிட்டிகுரூப் வங்கி ஏறக்குறைய 100 கோடி டாலர் மதிப்பும் அதிகமான தவறுகளைச் செய்துள்ளது. சிட்டி குரூப் வங்கி தவறு செய்வது முதல்முறை அல்ல 2020ம் ஆண்டில் 90 கோடி டாலர்களை தவறுதலாக ரிவியான் கிரெடிட்டர்ஸுக்கு வரவு வைத்தது.
2022ம் ஆண்டில் பேட் பிங்கர் டிரேடில் செய்த தவறால் ஐரோப்பியப் பங்குச்சந்தைக்கு 140 கோடி இழப்பு ஏற்பட்டது. இதற்காக சிட்டிகுரூப் வங்கிக்கு 79 லட்சம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. சிட்டிகுரூப் வங்கி விதிகளை முறையாகக் கடைபிடிப்பதில்லை, மந்தமாகச் செயல்படுகிறது என்பதற்றாக 1.36 கோடி டாலர் அபராதமாக பெடலர் வங்கி விதித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து… அடியோடு மாறிய ஆளுநர்..!