சட்டமன்ற தேர்தலில் மக்கள் எதிர்ப்பை கடுமையாக சந்தித்த முதல்வர்கள் தேர்தலில் வீழ்ந்து தோல்வியையும் தழுவிய கதையை பார்த்துள்ளோம், ஆனால் செல்வாக்கு உள்ள தலைவரான கேஜ்ரிவால் ஈகோ பிரச்சனையால் வீழ்ந்த கதை தான் இன்றைய ஹாட் டாபிக்.


காங்கிரஸுடன் கூட்டணிக்குள் சென்றிருந்தால் இந்த நிலை வந்திருக்க வாய்ப்பில்லை. அரவிந்த் கேஜ்ரிவால், மணிஷ் சிஷோடியா, சவுரப் பரத்வாஜ், துர்கேஷ் பதக், அவத் ஓஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றனர். டெல்லி முதல்வர் ஆதிஷாவும் முதலில் பின் தங்கி பின்னர் தப்பித்தார்.
இதையும் படிங்க: ஊழல்... ஊழல்... கெஜ்ரிவாலின் நிலைமைதான் நாளை திமுகவுக்கும்… நத்தம் விஸ்வநாதன் அதிரடி..!

ஆம் ஆத்மி கட்சியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பாஜக சார்பில் பர்வேஷ் சாஹிப் சிங்கும் போட்டியிட்டார். இதில் கேஜ்ரிவால் 4,100 க்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித் பெற்ற வாக்குகள் 4,568.

மற்றொரு மூத்த தலைவர் மனீஷ் சிசோடியா பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம் 675 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் ஃபர்கத் பெற்றது 7,350 வாக்குகள். மற்றொரு முக்கிய ஆம் ஆத்மி வேட்பாளர் மூன்று முறை அந்த தொகுதியில் வாகை சூடிய சவுரப் பரத்வாஜ் பாஜக சார்பில் போட்டியிட்ட ஷிகா ராயிடம் 3200 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கர்விந்த் சிங் பெற்ற வாக்குகள் 6,711.


மற்றொரு வேட்பாளரான துர்கேஷ் பதக் ஆம் ஆத்மியின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், இவர் பாஜக வேட்பாளர் உமாங் பஜாஜிடம் 1235 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இங்கு காங்கிரஸ் வேட்பாளர் வினீத் யாதவ் 4,015 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இதுபோன்று பாஜக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள், காங்கிரஸ், ஆம் ஆத்மி சேராததால் தோற்ற தொகுதிகள் இன்னும் உண்டு. ஈகோ இல்லாமல் விட்டுக்கொடுத்து அணி அமைத்திருந்தால் காங்கிரஸ் கோல்டன் டக், ஹாட்ரிக் டக் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. கெஜ்ரிவால், சிசோடியா உள்ளிட்ட தலைவர்கள் தோற்றிருக்க மாட்டார்கள்.
இதையும் படிங்க: பாஜவுக்கு வாழ்த்துகள்.. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.. அரவிந்த் கேஜ்ரிவால் உருக்கம்