199 பயணிகளுடன் அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து இந்திய தலைநகர் டெல்லிக்கு புறப்பட்ட விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவசர அவசரமாக அந்த விமானம் ரோமில் பத்திரமாக தரையிறக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
நியூயார்க்கின் ஜான் எஃப் கென்னடி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு டெல்லிக்கு 'அமெரிக்கன் ஏர்லைன்ஸ்' நிறுவன பயணிகள் விமானம் (789-9 ட்ரீம் லைனர்) புறப்பட்டது. நியூயார்க் - டெல்லி இடையே 14 மணிநேரம் பயணம் ஆகும்.

இந்த விமானம் புறப்பட்ட 10 மணி நேரத்தில், விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்ததால் கருங்கடலுக்கு அருகே விமானி அதன் பாதையை மாற்றி ரோமின் பியூமிசினோ விமான நிலையத்தை நோக்கி பாதையை மாற்றினார்.
இதையும் படிங்க: டெல்லியில் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் அதிஷி..! அரவிந்த் கெஜ்ரிவால் தோற்றதால் அடிச்சது லக்..!
போர் விமானங்கள் பாதுகாப்புடன்!
இத்தாலி வான் வெளியை நெருங்கியதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இத்தாலிய போர் விமானங்கள் பாதுகாப்புடன் அந்த விமானத்தை தரையிறக்க உதவின. உள்ளூர் நேரப்படி மாலை 5.30 மணி அளவில் ரோம் விமான நிலையத்தில் பாதுகாப்புடன் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
எதற்காக விமானம் அவசரமாக பாதை மாற்றப்பட்டதுஎன்பதற்கான தகவலை அதிகாரபூர்வமாக விமான பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என்றாலும், இடையே வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் விமானம் திருப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை அன்று இந்த விமானம் டெல்லிக்குபுறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ரோம் விமான நிலையத்தில் முழுமையாக விமானத்தை சோதனை நடத்திய அதிகாரிகள் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என்றும், மிரட்டல் வெறும் புரளி என்றும் பின்னர் தெரிவித்தனர்.
இருந்தாலும் விமானம் டெல்லி சென்று அடைந்த பிறகு தரையிறங்குவதற்கு முன்பாக நெறிமுறைப்படி உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான பணியாளர்கள் ஓய்வெடுக்கும் வகையில் இரவு முழுவதும் விமானம் ரோமில் நிறுத்தப்பட்டு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
விமானம் காஸ்பியன் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக மற்றொரு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் இந்த மிரட்டல் வந்ததாகவும் பின்னர் அது ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் ஏபிசி நியூஸ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
ரோமில் தரை இறங்கிய பிறகு விமான பயணிகளும் பணியாளர்களும் இறங்கிய காட்சிகள் வீடியோக்கள் மற்றும் படங்கள் மூலமாக சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. அந்தக் காட்சியில் போர் விமானங்கள் ராணுவ மாதங்கள் பாதுகாப்பாக அழைத்து வந்து தரையிறங்க வைத்ததையும் பார்க்க முடிந்தது.
விமான கண்காணிப்பு எக்ஸ் வலைதள பதிவில் "பிளைட் எமர்ஜென்சி" வெடிகுண்டல் வெடி குண்டு மிரட்டல் காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 100 பெண்களுடன் 'டேட்டிங்'..! ரூ.3 கோடி சுருட்டிய 'காதல் மன்னன்' கைது..!