திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள கொண்ணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அழகுமலை. வயது 55. கட்டிட வேலை செய்து வந்தார். இவருக்கு உதவியாக சோழவந்தானை சேர்ந்த 50 வயதான மனோகர் என்பவர் பணிபுரிந்து வந்தார். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை. அதனால் இருவருமே கொண்ணாம்பட்டியில் வீடு எடுத்து குடியிருந்து வந்துள்ளனர். 6 மாதங்களுக்கு முன்பு நடந்த திருவிழா ஒன்றில், அதேபகுதியை சேர்ந்த 22 வயதான நவீன் என்பவருக்கும் இவர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது 45 வயதான நவீனின் தாயார் கிருஷ்ணவேணியும், 60 வயதான பாட்டி சுந்தரியும் நவீனுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

அப்போது அவர்கள் இருவரையும் அழகுமலையும், மனோகரும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த் நவீன், பீர் பாட்டிலை உடைத்து அழகுமலையை குத்திஉள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதனப்படுத்தி தடுத்துள்ளனர். காயமடைந்த அழகுமலையை மருத்த்துவமனையில் அட்மிட் செய்துள்ளனர். பீர் பாட்டிலால் குத்திய விஷயம் போலீஸ் கேஸ் ஆகவே, இருதரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அழகுமலை தரப்பிடம் சமாதானம் பேசிய போலீசார் நவீனை எச்சரிக்கை செய்து அனுப்பினர். இனி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் கட்டாயம் சிறை தான் என எச்சரித்துள்ளனர்.
இதையும் படிங்க: கிடுகிடுத்துப் போன திண்டுக்கல்... திடுக்கிடும் வெடி சத்தம்... மீண்டும் மீண்டும் மிரண்டு போன மக்கள்...!

6 மாதங்கள் கடந்த நிலையில், நவீனுக்கும் அதேபகுதியில் மற்றொரு நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறுக்கு முக்கிய காரணமே அந்த அழகுமலை தான் என நவீனின் தாய் கிருஷ்ணவேணியும், பாட்டியும் நவீனிடம் ஏற்றிவிட்டுள்ளனர். அவனை சும்மாவே விடக்கூடாது என்றும், அவன் உயிரோடு இருக்கும் வரை நமது குடும்பம் நிம்மதியாகவும், தலைநிமிர்ந்தும் வாழமுடியாது என்றும் உசுப்பேற்றியுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த நவீன் அவர்கள் இருவரையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான்.

இரவு அழகுமலை மற்றும் மனோகர் இருவரும் கட்டிட வேலையை முடித்துவிட்டு வெங்கடாஸ்திரி கோட்டை வழியாக சாலையில் நடந்து வந்துள்ளனர். அப்போது அங்கே மறைந்திருந்த நவீன், சவுக்குமர கட்டையால் இருவரையும் சரமாறியாக தாக்கி உள்ளான். இருவரும் பதில் தாக்குதல் நடத்தியதில் நவீனும் காயமடைந்தாலும், வயதானவர்கள் என்பதால் அவர்கள் இருவரும் அங்கேயே சுருண்டு விழுந்துள்ளனர். நவீன் ஆத்திரம் தீரும் வரை கட்டையால் தாக்கியதில் அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலெயே இறந்தனர்.
லேசான காயங்களுடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய நிலையில் அவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

இதற்கிடையே இந்த கொலை சம்பவம் குறித்து அறிந்து, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் பட்டிவீரன்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன், வத்தலக்குண்டு காவல் நிலைய ஆய்வாளர் சிலைமணி, நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்துவந்தனர். இற்ந்து கிடந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக நவீன் இந்த செயலை செய்தது தெரிந்தது.

வத்தலகுண்டு மருத்துவமணைக்கு போலீசார் செல்கையில் அங்கிருந்து தப்பிக்க முயன்ற நவீனை துரத்தி பிடித்துள்ளனர். இதில் நவீனுக்கு காலில் எலும்புமுறிவு ஏற்பட்டது. நவீனை கைது செய்த போலீசார் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கான அனுமதித்தனர். நவீனை கொலை செய்ய தூண்டியதாக அவனது தாயார் கிருஷ்ணவேனி, பாட்டி சுந்தரி ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன் பீர் பாட்டிலால் அழகுமலையைக் குத்திய வழக்கில் நவீன்குமார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் 2 பேர் இறந்திருக்க மாட்டார்கள் என அழகுமலையின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: KCRக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியவர் கொலை..! தெலுங்கானாவில் அட்ராசிட்டி..!