2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 13 மாதங்களே உள்ள நிலையில், திமுகவில் தேர்தல் ஆயத்த பணிகள் மற்றும் தொடர் வேலைகள் அதிரடியாக ஆரம்பித்துள்ளன.
திமுக இளைஞரணி தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு வரும் தரவுகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் சரி வர கட்சி பணி ஆற்றாதவர்கள் மீது முதலமைச்சரிடம் அனுமதி பெற்று உடனுக்குடன் துரைமுருகன் வாயிலாக நீக்கம் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறதாம்.

திமுக மிகவும் பலவீனமாக இருந்த மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தில் தான் தற்போது களை எடுப்பும் அதிரடி மாற்றமும் நடைபெற்று உள்ளது.
இதையும் படிங்க: குடித்துவிட்டு தகராறு செய்த மருமகன்.. உருட்டு கட்டையால் அடித்து கொலை.. தென்னைமரத்தில் தூக்கிலிட்ட மாமனார், மாமியார்..!
ஒரு காலத்தில் முல்லை வேந்தன் கோலேச்சிய தர்மபுரி மாவட்டத்தில் கடந்த தேர்தலின் போது சொல்லிக் கொள்ளும் வகையில் ஒரே ஒரு தலைவர் கூட திமுகவுக்கு இல்லாமல் போனதால் ஆறுக்கு ஆறு தொகுதிகளிலும் திமுக மண்ணை கவ்வியது. இந்த நிலையில் தான் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த முன்னாள் அமைச்சர் கே.பழனியப்பன் திமுகவில் இணைந்தார், இதனால் தர்மபுரி மாவட்டத்தில் திமுக மெல்ல வளர தொடங்கியது.

மற்றொரு பக்கம் தருமபுரி மாவட்ட கிழக்கு பகுதியில் எம் பி ஆக இருந்த செந்தில் சற்று வேலைகள் செய்து வந்தார்,ஆனால் தற்போது அவரும் ஓரம் கட்டப்பட்டுள்ளதால் அங்கு பணிகள் சுத்தமாக முடங்கிப் போய் உள்ளதாக உள் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் தான் தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த முன்னாள் எம் எல் ஏ தடங்கம் சுப்பிரமணி பதவி நீக்கம் செய்யப்படுவதாக திமுகவிலிருந்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தற்போது தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து வரும் தடங்கம் சுப்பிரமணியை நீக்குவதாகவும் அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளராக பி.தர்மசெல்வன் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவில் மிக முக்கிய புள்ளியாக வலம் வந்தவர் தடங்கம் சுப்பிரமணி, அவர் கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது தர்மபுரி மாவட்ட கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

கடந்த சில நாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டத்திலும் இதே போன்று ஒரு களை எடுப்பு மற்றும் மாற்றம் நடைபெற்றது திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ் எம் மதுரா செந்திலை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக கே எஸ் மூர்த்தியை நியமனம் செய்தனர்.
இதேபோன்று விழுப்புரம் மாவட்டத்திலும் பல மாற்றங்கள் நடைபெற்றுள்ளது அங்கு பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணி, லட்சுமணன் ஆகியோருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது.
திமுகவில் இந்த அதிரடி மாற்றங்கள் இதோடு நின்று விடாமல் தொடர்ந்து இன்னும் மூன்று மாத காலத்திற்கு இந்த மாற்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும் என சொல்லப்படுகிறது
.
இதையும் படிங்க: புறக்கணிக்கப்படுகிறாரா அமைச்சர் பொன்முடி...கடுப்பில் சீனியர்கள்...அதிமுகவிலிருந்து வருபவர்களுக்கே பதவி?