நாடாளுமன்றம் ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு மார்ச் 10 ஆம் தேதி மீண்டும் கூடுகிறது. அப்போது அமைச்சகங்களின் மானியக் கோரிக்கைகள் குறித்து விவாதிக்கவும் பட்ஜெட் செயல்முறையை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கு கூறப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இந்த கூட்டத்தொடர் ஏப்ரல் 4 ஆம் தேதி முடிவடையும் நிலையில், முழு பட்ஜெட் கூட்டத்தொடரும் 27 அமர்வுகளைக் கொண்டிருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்த வேண்டும், சிறு மற்றும் குறு தொழில்களுக்கான சலுகை உள்ளிட்ட பல்வேறு எதிர்பார்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது இது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை வழங்காமல் இருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி.க்கள் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: டாஸ்மாக் தலைமை அலுவலகம்- திமுக எம்.பி நிறுவனத்தில் ED ரெய்டு..! செந்தில் பாலாஜிக்கு செக்..?

அது மட்டுமல்லாது தொகுதி மறு சீரமைப்பு குறித்த மத்திய அரசின் அறிவிப்புக்கு தங்களது கடுமையான கண்டனங்களையும் அவர்கள் பதிவு செய்ய இருப்பதாக தெரிகிறது. மேலும் பல முக்கிய விவகாரங்கள் குறித்து பேசப்பட உள்ள நிலையில், நாளை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் அரங்கில் காலை 10:30 மணியளவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் நாடாளுமன்றம் கூட உள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக இது பார்க்கப்படும் நிலையில், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. அப்போது முதலமைச்சர். ஸ்டாலின் பல்வேறு அறிவுரைகளை வழங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பள்ளிக் கல்வி திட்டத்தில் மூன்று மாநிலங்களுக்கு நோ பண்ட்.. பாஜக அரசை அம்பலப்படுத்திய அன்பில் மகேஸ்