தொகுதி மறுசீரமைப்பு செய்யும் மத்திய பாஜக அரசின் முடிவை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இந்த நிலையில்,மார்ச் 5 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தொகுதி மறு வரையறை தொடர்பான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது அனைத்து மாநில முதல்வர்களையும், கட்சி தலைவர்களையும் கூட்டி வரும் 22ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டபடி அமைக்கப்படவுள்ள கூட்டு நடவடிக்கை குழுவுக்கு பிற மாநில கட்சிகளை நேரில் சென்று அழைக்க அமைச்சர்கள், எம்.பி.க்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.
இதையும் படிங்க: சட்டசபையில ஜெயலலிதா புடவையை இழுத்த திமுக நாகரிகம் பேசலாமா..? அலறவிட்ட நிர்மலா சீதாராமன்
அந்த குழுவினர் ஒவ்வொரு மாநில முதல்வர்களையும் நேரில் சென்று அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்து வருகின்றனர்.

கேரளாவுக்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், ஆந்திராவுக்கு அமைச்சர் எ.வ.வேலு, மேற்கு வங்கத்திற்கு கனிமொழி, ஒடிசா மாநிலத்திற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
தொகுதி மறு வரையறை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோரை தமிழக அமைச்சர் பொன்முடி, எம்பி அப்துல்லா ஆகியோர் சந்தித்து அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

இந்த நிலையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகனை தமிழக குழு சந்தித்தது. ஜெகன் மோகன் ரெட்டியை தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது வரும் 22 ஆம் தேதி நடக்கவுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தனர்.

தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கும் அனைத்து எதிர்கட்சிகளையும் அதன் தலைவர்களையும் சந்தித்து திமுக ஆதரவு திரட்டி வருவது பிஜேபி தலைமையை எரிச்சல் அடைய செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: நாம் தமிழர் தம்பிக்கு அடிச்ச "ஜாக்பாட்"..! கடுப்பில் ஒரிஜினல் கட்சிக்காரர்கள்..!