நினைத்தாலே பதறுகிறது... கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ... மூன்று பெண்கள் தங்கள் வாழ்க்கையை நரகத்தை விட மோசமாக்கிய மனித மிருகம் யார் என அடையாளம் கண்டு கொள்ள போராடினர். 1975 ல் கொடூரமான, மறக்க முடியாத தாக்குதலுக்கு ஆளான கேத்தி ரோட்லர், அவரது தங்கை ஷெர்ரி ரோட்லர் ட்ரிக், அவர்களது தோழி கேண்டீஸ் ஸ்மித் ஆகிய மூன்று பெண்களுக்கு ஏற்பட்ட கொடூரமான சம்பவம் இது.
ஆகஸ்ட் 1975ல், 14 வயதான கேத்தி தனது 13 வயது தோழி கேண்டிஸ், 11 வயது தங்கை ஷெர்ரியுடன் வெளியே செல்ல முடிவு செய்த ஒரு அதிர்ஷ்டமான இரவு அது. இவர்கள் மூவரும் வீட்டில் உள்ள பெரியவரை அழைத்துச் செல்லாமல் வெளியே சென்றது அதுவே முதல் முறை. மூவரும் சாலையோரத்தில் நின்று கொண்டு, இந்தியானாவில் உள்ள கம்பர்லேண்ட் அருகே உள்ள டீன் ஏஜ் ஹேங்கவுட்டிற்கு லிப்ட் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
சிறிது நேரம் கழித்து, ஒரு வெள்ளை நிற காரில் வந்த ஒருவர் அவர்கள் மூவரின் அருகில் நிறுத்தி, அவர்களை அவர்கள் செல்லும் இடத்தில் இறக்கி விடுவதாக கூறியுள்ளார். அதனை நம்பி மூவரும் அவரது காரில் அமர்ந்தனர். ஆனால் அவர்கள் செய்த பெரிய தவறு எவ்வளவு பெரியது என்பதை அவர்கள் உணர்ந்தனர். கார் அவர்கள் இறங்கும் இடத்தையும் தாண்டிச் சென்றது.
இதையும் படிங்க: வசதியானவர்களை நோட்டமிடும் ரேபிட்டோ, ஓலா, ஊபர்... ஆப்ஸ் மூலம் பயணிகளுக்கு ஆப்பு... அதிர வைக்கும் கொள்ளை..!
அவர்கள் மூவரும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டபோதுஅந்த நபர் அவர்களிடம் உங்கள் மூவரையும் கடத்திச் செல்கிறேன் எறு கூறியுள்ளார். அவர்கள் மூவரையும் பிணைக் கைதிகளாக வைத்து பணம் கேட்டு மிரட்டினார். பயந்துபோன சிறுமிகள் கதவை திறக்க முயன்றனர். அடுத்து நடந்த சம்பவம் இந்த மூன்று பெண்களுக்கும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக பயங்கர வேதனையை ஏற்படுத்தியது.
ஒரு பயங்கரமான 15 நிமிட பயணத்திற்குப் பிறகு கார் ஒரு வயலில் நின்றது. கத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டிய அந்த டிரைவர் சிறுமிகளின் கைகளை கட்டினார். காரின் முன் இருக்கையில் வைத்து ஷெர்ரியை பலாத்காரம் செய்த அவர், பின்னர் அவர்கள் 3 பேரையும் பலமுறை கத்தியால் குத்தினார். பாதி இறந்த நிலையில் சிறுமிகளை அங்கேயே விட்டுவிட்டு ஓடிவிட்டார். அந்த மூன்று சிறுமிகளும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.
டிரைவர் தப்பி ஓடிய சில நிமிடங்களுக்குப் பிறகு, ஷெர்ரியை காணவில்லை. ஷெர்ரி கடத்தப்பட்டிருக்கலாம் என்று நினைத்த மற்ற இரு சிறுமிகளும் அருகில் உள்ள நெடுஞ்சாலையை அடைந்து வழியில் சென்ற காரை நிறுத்தி உதவி கேட்டனர்.
வழியில் ஒரு கார் நிறுத்தி உதவிக்கு வந்தது. அந்தக் காரில் இருந்தவர் காவல் துறையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி.
சிறுமிகள் இருவரும் ரத்த வெள்ளத்தில் நனைந்திருப்பதைப் பார்த்ததும், அவர்களின் வேதனையைக் கேட்டதும், மூன்றாவது பெண்ணைத் தேடி உடனடியாக அதே இடத்தை அடைந்தார். தேடலுக்குப் பிறகு, ஷெர்ரி வயலில் ஒரு ஓரமாக துடிதுடித்துக் கொண்டிருந்தார். அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. மூச்சுத்திணறினார். மோசமாக இரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மூவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கேண்டிஸின் கழுத்தில் 12 கத்தி வெட்டுக்கள் இருந்தன. 300 தையல்கள் போடப்பட்டன. மூன்று உயிர்களும் காப்பாற்றப்பட்டன. ஆனால் அந்த இரவின் பயங்கரம் இங்கு முடிவடையவில்லை. இந்தச் சம்பவம் குறித்த செய்தி பரவியபோது, அந்த மிருகத்தின் பெயர், அடையாளம் குறித்து யாருக்கும் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, கயிறு, கைக்குட்டை, சிகரெட் துண்டு ஆகியவற்றை கண்டெடுத்தனர். ஆரம்பத்தில் போலீஸாரின் சந்தேகம் சமீபத்தில் விடுவிக்கப்பட்ட கைதி மீது இருந்தது. துப்பு கிடைக்காததால், வழக்கு கிடப்பில் போடப்பட்டது.
பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளும் தங்கள் வாழ்க்கையைத் தொடர்ந்தனர். ஆனால் அவ்வளவு எளிதாக அந்தச் சம்பவம் அவர்கள் மனதை விட்டு நீங்கவில்லை. காவல்துறையோ, சட்டத்தை கடைப்பிடிப்பவர்களோ தங்களைப் பற்றி கவலைப்படவில்லை என்று அவர்கள் நினைத்தனர். மூவரும் தனிமையாகவும் அவமானமாகவும் உணர ஆரம்பித்தனர்.
இவர்களில் கேத்தி சிறிது காலம் கழித்து பள்ளியை விட்டு வெளியேறினார். லிப்ட் கேட்டது தவறு. நடந்ததற்கு நானே பொறுப்பு என்று உணர்ந்தாள்.
இருப்பினும், கேத்தி அவர்களின் வழக்கிற்காக காவல்துறையை தொடர்ந்து நாடி வந்தார். அவள் அடிக்கடி காவல்துறையின் தலைமையகத்திற்குச் சென்று தனக்கு நியாயம் கேட்டாள். இறுதியில், கேத்தியின் முயற்சிகள் பலனளித்தன. கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தாக்கியவர் அடையாளம் காணப்பட்டார். இந்த மிருகத்தின் பெயர் தாமஸ் வில்லியம்ஸ்.
தாக்குதல் நடந்த அன்று இரவு சிறுமிகள் மூவரின் ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் மூலம் அவர் அடையாளம் காணப்பட்டார். துரதிர்ஷ்டம் என்னவென்றால், அவர் அடையாளம் காணப்படுவதற்கு சுமார் 41 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். அவர் 1983 ல், 49 வயதில், வங்கிக் கொள்ளைக்காக டெக்சாஸ் ஜெயிலில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தபோது இறந்து விட்டார். மூன்று பெண்களுக்கும் தங்களைத் தாக்கியவர் அடையாளம் காணப்பட்டதாக அழைப்பு வந்தது ஒரு வேதனையான தருணம்.
இப்போது 'பீப்பிள் மேகசின் இன்வெஸ்டிகேட்ஸ்' என்ற எபிசோடில் தங்களுக்கு நேர்ந்த வேதனையைப் பகிர்ந்துள்ளனர். இன்வெஸ்டிகேஷன் டிஸ்கவரியில் வரும் டிசம்பர் 30 ஆம் தேதி 'தி இண்டியானா ஸ்லாஷர்' என்ற தலைப்பில் ஒளிபரப்பப்படும்.
இதுகுறித்து ஷெர்ரி கூறுகையில் 'அந்த மிருகம் என்னையும் என் தங்கையையும் என் அப்பாவி தோழியையும் உயிருடன் சாகடித்தது. செய்த குற்றத்திற்காக அவர் தண்டிக்கப்படவில்லை. ஆனால், நான் அவரை மன்னிக்கிறேன். அதிர்ஷ்டவசமாக அவர் இப்போது இறந்துவிட்டார். இப்போது அவரால் இதை வேறு யாருடனும் செய்ய முடியாது. அது முடிந்துவிட்டது’’ என்கிறார் வேதனையுடன்.
இதையும் படிங்க: தண்ணியில கண்டம்... பிரம்மபுத்ரா நதியில் சீனா கட்டும் வல்லரசு அணை... இந்தியாவை அழிக்க இப்படியொரு சதியா..?