இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு... உலகில் வேகமாக அழிந்து வரும் கடல் ஆமை இனங்களில் ஒன்றான ஆலிவ் ரிட்லி எனப்படும் சிற்றாமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு ஏற்ற இடமாக வங்கக் கடற்கரைகள் கருதப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் திசம்பர் மாதத்தில் தொடங்கி மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உலகின் பல்வேறு நாட்டு கடல்களிலும் வாழும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் பல்லாயிரக்கணக்கான கடல் மைல் தொலைவுக்கு பயணம் செய்து வங்கக் கடலோரத்திற்கு வருகின்றன.

சென்னைக்கும் கல்பாக்கத்துக்கும் இடைப்பட்ட பகுதிகளில் கடல் ஆமைகள் அதிக அளவில் கொல்லப்படுவதற்கு அந்தப் பகுதிகளில் இழுவைப் படகுகளை பயன்படுத்தியும், நீண்ட மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்கள் பிடிக்கப்படுவதும் தான் காரணம் ஆகும்.
இதையும் படிங்க: ஈசிஆரில் பெண்களை மிரட்டிய திமுக குண்டர்களுக்கு போலீசார் ஆதரவா..? வெகுண்டெழுந்த அன்புமணி ராமதாஸ்..!

கடல் ஆமைகள் முட்டையிடும் காலத்தில் இழுவைப் படகுகளையும், நீண்ட வலைகளையும் பயன்படுத்துவதற்கு 1983-ஆம் ஆண்டின் தமிழ்நாடு கடல்பகுதி மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இழுவைப் படகுகளால் கடல் ஆமைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்கான சிறந்த வழி அவற்றில் கடல் ஆமைகள் சிக்காமல் விலக்கி விடுவதற்கான கருவிகளை (Turtle Excluder Devices -TED) பொருத்துவது தான். அனைத்து இழுவைப் படகுகளிலும் இத்தகையக் கருவிகள் பொருத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். கடல் ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்குவதற்கு முன்பாக இழுவைப் படகுகளில் இத்தகைய கருவிகள் பொருத்தப்பட்டுள்ளனவா? என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அரசின் கடமை. ஆனால், இந்தக் கடமையை தமிழக அரசு ஒருபோதும் செய்வதில்லை என்பது தான் வேதனையான உண்மையாகும்.

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் கொல்லப்படுவதைத் தடுப்பதற்காக பல விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாதது தொடர்பான வழக்கில் கடந்த 2017&ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, இனிவரும் ஆண்டுகளில் அனைத்து விதிகளையும் முழுமையாக கடைபிடிப்பதாக தமிழக அரசு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை தமிழக அரசு செயல்படுத்தாததால் தான் ஆயிரக்கணக்கான ஆமைகள் இறந்திருக்கின்றன.

ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசுக்கும், மக்களுக்கும் உண்டு. ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் காலத்தில் பின்பற்றப்பட வேண்டிய அனைத்து விதிகளும் கடைபிடிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதன் மூலம் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்கு மிகவும் பாதுகாப்பான பகுதியாக சென்னை பழவேற்காடு & கல்பாக்கம் இடையிலான கடற்கரையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்
இதையும் படிங்க: இனி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான்.. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடி கணிப்பு!