ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். வயது 34. இவர் தனியார் பள்ளி காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பாண்டிசெல்வி. வயது 26. இவர்களுக்கு நான்கு வயதில் நவீன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்றை வருடங்களுக்கு முன்பு குமார் மனைவி பாண்டி செல்விக்கு ஆண்,பெண் என்ற இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. இதற்கு முன்னதாக குமாருக்கு மனைவி பாண்டி செல்வி நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டு இருவரிடையே அவ்வபோது சண்டை வந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையிலான உறவு சுமூகமாக இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இரட்டை குழந்தையில் ஆண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் ஒன்றை வயது பெண் குழந்தை திபாஸ்ரீயை கணவர் பொறுப்பில் விட்டுவிட்டு, இரண்டு ஆண் குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பாண்டிசெல்வி சென்றுள்ளார். வீட்டில் இருந்த குழந்தையை பெண் குழந்தையை கணவர் குமார் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் தீடிரென குழந்தை மூச்சு இல்லாமல் மயங்கி விட்டதாக கூறி, மனைவி பாண்டி செல்விக்கு கணவர் குமார் போனில் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 80 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த கார்.. பெட்ரோல், ஆயில் கலந்து விஷமான தண்ணீர்.. 2 பேர் பலி..!

இதனால் பதறிப்போன பாண்டிசெல்வி, வேக வேகமாக வீடு திரும்பினார். பின்னர் குழந்தையை மொடக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றுள்ளார்.அங்கே குழந்தை திபாஸ்ரீயை பரிசோதனை செய்த மருத்துவர்கள், குழந்தை வரும் வழியில் இறந்து விட்டதாக கூறினார். நன்றாக பால் குடித்துவிட்டு தூங்கிய குழந்தை திடீரென எப்படி இறக்கும் என மனைவி பாண்டி செல்வி, கணவர் குமாரிடம் சண்டை பிடித்துள்ளார். பின்னர் குழந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி பாண்டி செல்வி, மொடக்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

குழந்தை சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் குழந்தை மூச்சு திணறல் காரணமாக உயிரிழக்க வில்லை எனவும் தலையில் அடிப்பட்டு உயிரிழந்ததாகவும் தெரியவந்தது. இதனால் கணவர் குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
குழந்தை எப்படி மயங்கியது? தொட்டிலில் தூங்கிய குழந்தைக்கு தலையில் எப்படி அடிபட்டது என அடுக்கடுக்காய் கேள்விகளை அடுக்கினர். ஆரம்பத்தில் ஏதும் தெரியாது என சாதித்த குமார், பின்னர் போலீசாரின் தனித்துவ கவனிப்பால் உண்மையை ஒப்புகொண்டான்.

மனைவி பாண்டி செல்வி நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக குழந்தை பிறப்பில் மன உளைச்சலில் இருந்ததாக கூறி உள்ளான். யாரும் இல்லாத் நேரம் என்பதால் தொட்டியில் தூங்கிய குழந்தைய தொட்டிலோடு சேர்த்து சுவற்றில் மோதி கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்தான். இதன் பின்னர் மொடக்குறிச்சி போலீசார் குழந்தை சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்து குழந்தை தந்தை குமார் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: தொந்தரவு செய்த முன்னாள் காதலன்.. தனியே அழைத்து கதையை முடிக்க பார்த்த காதலி.. தோட்டத்தில் காத்திருந்த காதல் பரிசு..!