ஈரோடு கிழக்கில் ஈவிகேஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவேரா திடீரென மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், 2023 ஆம் ஆண்டு மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதில் ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி இடையே முதல் முறிவு ஏற்பட்டது, இந்த இடைத்தேர்தலில் தான் ஓபிஎஸ்-எடப்பாடி என அதிமுக பிரிந்து நின்று சந்திக்கும் தேர்தலாக மாறியது. ஓபிஎஸ்சுக்காக அண்ணாமலை, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோர் அதிமுக தலைவர்களிடம் தூது சென்றதும், ஒன்று பட்டு நின்றால் ஆதரவு என நிபந்தனை விதித்ததும் நடந்தது.
இந்த தேர்தலில் தான் இரட்டை இலை ஓபிஎஸ்- எடப்பாடி பஞ்சாயத்துக்கு பொதுக்குழு உறுப்பினர் ஆதரவை வைத்து முடிவு செய்துக்கொள்ளுங்கள் என உச்ச நீதிமன்றம் முடித்து வைத்ததும் இந்த தேர்தலில் தான். ஈரோடு கிழக்கு ஃபார்முலா, பட்டி ஃபார்முலா என்கிற புதிய பார்முலாவை அறிமுகப்படுத்தியதும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தான். இந்நிலையில் ஈவிகேஎஸ் மரணத்தால் மீண்டும் இடைத்தேர்தல் வந்தது.
இந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியை தன்வசம் வைத்துக் கொள்ளலாம் என்று திமுக திட்டமிட்டிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக வேட்பாளரை நிறுத்தி தன் வசப்படுத்தலாம் என்று திமுக தலைமை நினைத்திருந்த வேளையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் பத்திரிகையாளர் சந்திப்பை உடனே நடத்தி "ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிறுத்தப்படுவார். தமிழக முதல்வரிடம் இது குறித்து பேசி உரிய முடிவு எடுப்போம்" என்று பட்டென்று அறிவித்துவிட்டார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை.
இதையும் படிங்க: இரட்டை இலை வழக்கில் அதிமுகவிற்கு நிவாரணம்...மீண்டும் மீண்டும் மோதும் நீக்கப்பட்ட டீம் மேட்ஸ்
இது திமுகவின் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதி என்றாலும் தோழமைக் கட்சியான திமுகவுடன் கலந்து பேசாமல் உடனடியாக இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவித்ததும் திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அன்றே நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த அறிவிப்பின் மூலம் திமுக போட்டியிடும் வாய்ப்பை சாதுரியமாக செல்வ பெருந்தகை தட்டி கழித்து விட்டார் என்று காங்கிரஸார் பெருமையுடன் பேசிய நிலையில் மூன்று நாட்கள் கூட அதற்கு ஆயுசில்லை.

காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அழைத்து தேர்தலுக்கு ஓராண்டே உள்ளது. திமுக மீது அதிக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. இதை போக்கும் விதத்தில் தேர்தலில் பெருவெற்றி பெற்று பதிலடி கொடுக்க நினைக்கிறோம், நீங்கள் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று கூறி தொகுதியை கேட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிவிப்பில்..”ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி இடை தேர்தல் வரவிருப்பதை நாம் அனைவரும் அறிவோம், இந்த தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவு அடைந்ததையொட்டி இடை தேர்தல் வரவிருக்கிறது.
2026 சட்டமன்ற பொது தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், மாண்புமிகு முதல் அமைச்சர் மற்றும் இந்தியா கூட்டணியின் தமிழ்நாட்டின் தலைவராக விளங்கி கொண்டிருக்கும் ஸ்டாலின் முதல் முறையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க அகில இந்திய காங்கிரஸ் தலைமை மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையின் தீவிர ஆலோசனைக்கு பிறகு நாங்கள் அனைவரும் ஒரு மனதாக ஏற்றுக்கொண்டு இந்திய கூட்டணியின் சார்பாக ஈரோடு கிழக்கு தொகுதியின் இடை தேர்தலில் திமுகவின் வேட்பாளர் போட்டியிடுவார் என்று இன்று உறுதிசெய்யப்பட்டது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாட்டில் ஜனநாயகம் மலரச்செய்ய நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்திய கூட்டணியின் திமுக வேட்பாளரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வோம்”. என்று அறிக்கை விட்டு சோகத்தை நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டு அறிவித்துள்ளார். இத்துடன் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கையைவிட்டு செல்கிறது. இதேபோல் திமுக வேட்பாளராக sஅந்திரகுமாரும், செந்தில்குமாரும் போட்டியில் இருக்கின்றனர். சந்திரகுமார் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது, என்று திமுகவுக்குள் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படிங்க: பெரியாரும் வேண்டும்..பெருமாளும் வேண்டும் ..புது ரூட்டில் துரை.வைகோ..!