இருவருக்கும் எதிராக அந்தந்த மாநில போலீஸாரின் பரிந்துரையின் அடிப்படையில் சிபிஐ மூலம் இன்டர்போலுக்கு ரெட் அலர்ட் நோட்டீஸ் விடுக்கப்பட்டிருந்தது. தமிழகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் சுந்தரம் என்பவர் பொன்சி திட்டத்தில் ரூ.87 கோடி மோடி செய்து தப்பிவிட்டார். இவர் மீது தமிழக பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இவர் மீது குற்றச்சதி, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், முதலீட்டாளர்களின் டெபாசிட்களுக்கு உரிய வட்டி, டெபாசிட்களை திருப்பித் தராமல் இருத்தல் உள்ளிட்ட பரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

தமிழக பொருளாதாரக் குற்றப்பிரிவின் பரிந்துரையின் அடிப்படையி் சிபிஐ, ஜனார்தனனுக்கு எதிராக இன்டர்போல் மூலம் ரெட்அலர்ட் நோட்டீஸ் 2023, ஜூன் 21ம் தேதி அனுப்பினர்.
நீண்ட காலமாகத் தலைமறைவாக இருந்த ஜனார்த்தன் நேற்றுமுன்தினம்(28ம்தேதி) தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு விமானத்தில் சென்றுள்ளார். ஆனால் ஜனார்த்தனன் மீது ரெட்அலர்ட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதால், அவரை தாய்லாந்து நாட்டுக்குள் அனுப்ப அந்நாட்டு அரசு மறுத்து தடுத்து வைத்திருந்தது. சிபிஐ, இன்டர்போல், பாங்காக்கில் உள்ள இந்தியத் தூதரகம், கொல்கத்தா விமானநிலைய அதிகாரிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஜனார்த்தனனை கைது செய்து தாயகம் அழைத்து வந்தனர்.

சிபிஐ செய்தித்தொடர்பாளர் கூறுகையில் “ தமிழகத்தில் பொன்சி திட்டத்தில் ரூ.87 கோடி மோசடி செய்த ஜனார்த்தனன் என்பவருக்கு எதிராக கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் ரெட்அலர்ட் நோட்டீஸ் இன்டர்போல் மூலம் அனுப்பி இருந்தோம். இவர் கொல்கத்தா விமானநிலையத்திலிருந்து தாய்லாந்தின் பாங்காக் நகருக்கு கடந்த 28ம் தேதி சென்றுள்ளார். ஆனால் ஜனார்த்தனனுக்கு எதிராக ரெட் அலர்ட் நோட்டீஸ் இருப்பதால் அவரை அந்நாட்டுக்குள் அனுப்ப அதிகாரிகள் மறுத்துவிட்டனர் . இது தொடர்பாக இந்தியத்தூதரகத்துக்கும் தகவல் அளித்தனர். இதன்படி, பாங்காக் இந்தியத் தூதரகம், பாங்காக் விமானநிலைய அதிகாரிகள், இன்டர்போல் ஆகியோரின் ஒத்துழைப்புடன் கொல்கத்தாவுக்கு ஜனார்த்தனன் அழைத்து வரப்பட்டார். அங்கு அவர் கைது செய்யப்பட்டு தமிழக போலீஸாரிடம் ஒப்படைக்கப்படுவார்” எனத் தெரிவித்தனர்.
2வதாக 20 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தைச் சேர்ந்த படேல் என்பவர் மோசடி, குற்றச்சதி, ஏமாற்றுதல் ஆகிய குற்றப் பிரிவுகளில் தேடப்பட்டு வந்தார். குஜராத்தின் ஆனந்த் நகரில் சாரோதர் நகரிக் ஷகாரி வங்கியை படேல் என நடத்தி வந்தார், இதன் இயக்குநராகவும் படேல் இருந்தார். கடந்த 2002ம் ஆண்டு ரூ.77 கோடி மோசடி செய்து படேல் தப்பிவிட்டார்.
இதையும் படிங்க: வேங்கைவயல் விவகாரம் - தனிமனித மோதலே காரணம்... நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்

இவர் மீது குஜராத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து நீண்டகாலமாகத் தேடி வந்தனர். கடந்த 2004ம் ஆண்டு மார்ச் 3ம் தேதி படேலுக்கு எதிராக சிபிஐ இன்டர்போல் மூலம் ரெட் அலர்ட் நோட்டீஸ் அளித்திருந்தது.
இந்த ரெட்அலர்ட் நோட்டீஸ் அளித்தும் படேலை 20 ஆண்டுகளாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று(29ம்தேதி) அமெரி்க்காவில் இருந்து அமதாபாத் விமானநிலையத்தில் படேல் வந்து இறங்கினார். இவர் மீது ஏற்கெனவே ரெட் அலர்ட் நோட்டீஸ் இருப்பதை அறிந்த விமானநிலைய அதிகாரிகள் அவரை கைது செய்தனர். அதன்பின் ஆனந்த் நகர போலீஸாரை அகமதாபாத் வரவழைத்து படேலை அவர்களிடம் ஒப்படைத்தனர் என்று தெரிவித்தனர்.
இதையும் படிங்க: பட்டியல் சமூகத்திலிருந்து முதல்வர் வர வேண்டும்.. ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி சரவெடி!