அதிமுக ஆட்சியின் போது புரட்சி வசனம் பேசிய பல நடிகர்களும் நவ துவாரங்களையும் மூடிக்கொண்டு கம்மென கிடக்கிறார்கள்.
இந்த திமுக ஆட்சியின் அவலத்தை ‘தளபதி விஜய்’ தான் மிகத் தைரியமாக வெளிப்படுத்தியுள்ளார் என சிலாகிக்கிறார்கள் தவெக அடிப்பொடிகள்.
ஐடியாலஜினா என்னன்னு தெரியாமல் கவர்ச்சி, எச்சில் தெரிக்க பேசுவதில் ஈர்த்ததுதாண்டா அரசியல். பழைய ஐடியாலஜி எல்லாம் ரிஜெக்ட் பண்ணு’’ என விஜய் ரசிகர்கள் துடிப்பதாக கடுப்பாகிறார்கள் எதிர்த்தரப்பினர்.
இதையும் படிங்க: 2026ல் -கனவு காணும் எடப்பாடியார்..! கருகும் இலை... கூட்டணிக்கு என்ன விலை..?
பதிலுக்கு‘பனையூரைத் தாண்டி வா’ என கதறும் உடன்பிறப்புகளே, இருமுறை வந்ததற்கே இப்படி கதறுகிறீர்களே, தினமும் அவர் வந்தால் எப்படி கதறுவீர்கள்..? என வரிந்து கட்டி வார்த்தைகளை வீசுகிறார்கள் விஜய் தொண்டர்கள்.
ஆனால், கட்சி தொடங்கி ஒருமுறை கூட செய்தியாளர் சந்திப்பை நடத்தவில்லை என்கிற விமர்சனமும் நடிகர் விஜய் மீது அழுத்தமாக விழுந்து வருகிறது.
சரி விஜயின் நிலைப்பாடு தான் என்ன? என அரசியல் விமர்ச்கர்கள் என்ன சொல்கிறார்கள்..? ‘‘தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி கடந்த அக்டோபர் 27ம் தேதி முதல் மாநில மாநாட்டை நடத்தினார் விஜய். அந்த மாநாட்டில் தந்தை பெரியார் எங்கள் வழிகாட்டி, டாக்டர் அம்பேத்கர் எங்கள் கொள்கையின் தலைவர் என்று பிரகடனம் செய்தார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் தந்தை பெரியாரும், டாக்டர் அம்பேத்கரும் இந்து மதத்திற்கு எதிராகவும், தீண்டாமைக்கு எதிராகவும் கடுமையாக போராடியவர்கள். அவர்களை வழிகாட்டியாகவும், கொள்கை தலைவராகவும் விஜய் ஏற்றுக்கொண்டார்.
அந்த மேடையில் அஞ்சலை அம்மாள், பெருந்தலைவர் காமராஜர், ராஜாஜி, வேலுநாச்சியார் போன்ற தலைவர்களை எதற்காக கொண்டு வந்தார் என்பது தமிழ் மண்ணில் பிறந்த சிறு குழந்தைகளுக்கு கூட தெரியும். சாதியை ஒழிக்க போராடிய பெரியாரையும் வைத்துக்கொண்டு சாதிக்கு ஒரு தலைவரையும் தேர்ந்தெடுத்து கட் அவுட் வைத்த விஜய்யின் கொள்கையை எப்படி எடுத்துக் கொள்வது? கருவாடு, சாம்பாா், ரசம் ஆகியவற்றை கலந்த கலவையை போல் ஆன்மீகம், பெரியார், சாதி என்று அனைத்தையும் கலந்த கலவையான ஒரு கொள்கை திட்டத்தை ஆர்.எஸ்.எஸ். சிந்தனை கொண்டவர்களால் மட்டுமே தயாரிக்க முடியும்.
நடிகராக இருந்த விஜய், தவெக தலைவராக உருவெடுத்து விட்டார். அவர் கட்சி தொடங்கிய நாளில் இருந்து ஒரு கட்சியின் தலைவராக இதுவரை மக்களுக்காகவும், கட்சி தொண்டர்களுக்காகவும் அவர் செய்தது என்ன? தமிழ்நாட்டில் பெரும் புயல், வெள்ளப்பெருக்கு, பயிர் சேதம், வீடு இழந்தவர்கள், ஆடு, மாட்டை, பொருளாதாரத்தை இழந்தவர்கள் என்று லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்காக தவெக தலைவர் விஜய் என்ன செய்தார் என்று விமர்சனம் உண்டு.
குறைந்தபட்சம் நேரில் சென்று ஆறுதல் கூட சொல்லாமல், கண்துடைப்பிற்காக 300 பேரை அலுவலகத்திற்கு வரவழைத்து நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டால் ஒரு கட்சி தலைவரின் கடமை முடிந்து விட்டதா?
பெரியார் நடத்திய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு நாள் கேரளாவில் கொண்டாடப்பட்டது. பெரியாரை வழிக்காட்டியாக ஏற்றுக்கொண்ட விஜய், அது குறித்து எதுவும் கருத்து சொல்லவில்லை. அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6ம் தேதி அன்று பாபர் மசூதி இடிப்பு நாள், அதைப்பற்றி எதுவும் கருத்து சொல்லவில்லை. மதுரையில் டங்ஸ்டன் பிரச்னையில் மக்கள் போராடி வருகிறாா்கள், அதைபற்றியும் பேசவில்லை. ஒரு கட்சியின் தலைவர் நாட்டில் நடக்கின்ற எந்த பிரச்சனைக் குறித்தும் பேசாமல் இருக்கிறார்.
இந்தியாவில் மணிப்பூர் என்கிற ஒரு மாநிலம் இருப்பதை பிரதமர் மோடி எப்படி மறந்துப் போனாரோ, அதேபோன்று விஜய்யும் தான் கட்சி தொடங்கியதை மறந்துவிட்டாரோ என்று நினைக்க தோன்றுகிறது. விஜய் கட்சி ஆரம்பித்ததும் விமர்சனம் செய்து வந்த சில விபரம் அறியாத பாஜகவினர் கூட தற்போது எதுவும் பேசாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
2026 தேர்தலில் தவெக வை என்ன செய்ய வேண்டும் , அந்த கட்சியை எப்படி பயன்படுத்திக் கொள்வது என்று பாஜகவின் மேல் மட்டத் தலைவர்கள் முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள். விரைவில் வெளிச்சத்திற்கு வந்துவிடும்’’ என்கிறார்கள்.
இதையும் படிங்க: ‘என்னை நெருங்கி வந்தார்...’ பாஜக பெண் எம்.பி பரபரப்பு புகார்... எஸ்.சி-எஸ்டி சட்டத்தில் சிக்கும் ராகுல்காந்தி..?