நெரிசலில் சிக்கி ஏராளமானோர் காயம் அடைந்திருக்கலாம், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆனால், இதுவரை பக்தர்கள் உயிரிழப்பு குறித்து உ.பி. அரசு அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை. இந்துக்களின் புனிதநாளன தை அமாவாசையில் இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் வழக்கம் இருக்கிறது. இது வடமாநிலங்களில் மவுனி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. இந்த அமாவாசை தினத்தில் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்று கங்கை நதியில் புனித நீராடினால் பாவங்கள் கரையும் என்பது நம்பிக்கை.

இதையடுத்து, நேற்று இரவிலிருந்தே மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் நகரில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்தனர். இதனால் அதிகாலையில் பக்தர்கள் புனிதநீராடும் சங்கம் பகுதியில் கூட்ட நெரிசல் அதிகமாகி, மக்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் புனித நீராடிய பக்தர்கள் வெளியே வரமுடியாமலும், புனித நீராட முயல்பவர்கள் நதியில் இறங்கமுடியாமல் கூட்டம் கட்டுகடங்காமல் சென்றது.
இந்த தள்ளு முள்ளுவில் சிக்கி ஏராளமானோர் காயமடைந்தனர். இந்தத் தகவல் உடனடியாக போலீஸாருக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். கூட்டநெரிசலில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகி்சசைக்காக அனுப்பி வைத்தனர்.

அந்த வகையில் 30 பெண்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருவதாக மருத்துவமனை வட்டாரங்கள்தெரிவிக்கின்றன. பலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது, ஆனால் அதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. பிரயாக்ராஜ் நகரில் நடக்கும் சம்பவங்கள், நிலவரங்களை தெரிந்து கொள்ள முதல்வர் யோகி ஆதித்நாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி பேசியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், முதல்வர் ஆதித்திய நாத்தை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு விசாரித்து நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இந்துக்களை மட்டும் வெறுக்கிறது..?' கடுபேற்றிய கார்க்கே… கலங்கடிக்கும் பாஜக..!


முதல்வர் ஆதித்யநாத் எக்ஸ் தளத்தில் மக்களுக்கு விடுத்த வேண்டுகோளில் “ பக்தர்கள் அனைவரும் தங்களுக்கு அருகே இருக்கும் கங்கை ஆற்றில் புனித நீராடலாம். அனைவரும் சங்கம் பகுதிக்கு வரவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள். கூட்ட நெரிசலில் சிக்கி சில பக்தர்கள் தீவிரமான காயம் அடைந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் “ மகா கும்பமேளாவிற்கு வந்த துறவிகள் மற்றும் பக்தர்களிடையே நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த, மகா கும்பமேளாவின் நிர்வாகம் மற்றும் மேலாண்மை உடனடியாக உ.பி. அரசு மற்றும் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படாமல் ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாலிவுட் நடிகை மம்தா குல்கர்னி, மகா கும்பமேளாவில் துறவறம் பூண்டார்; 'முற்றும் துறந்தும்' சினிமா ஆசை விடவில்லை