மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவு செய்த தகுதியான வாக்காளர்களைவிட, வாக்களித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எப்படி என்று தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் உத்தவ் சிவசேனா கட்சியின் சஞ்சய் ராவத், சரத்பவார் தலைமையிலான என்சிபி கட்சியின் எம்பி சுப்ரியா சுலே ஆகியோருடன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர்கள்பெயர் சேர்தலில் குளறுபடி, எண்ணிக்கையில் குளறுபடி, அவசரம் அவசரமாக வாக்காளர்களைச் சேர்த்து குறித்து ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தை கேள்வி எழுப்பினார்.
அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
2019ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கும், 2024 மக்களவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் 32 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், மகாராஷ்டிரா சட்டப்பேரைவத் தேர்தல் நடப்பதற்கு 5 மாதங்களுக்கு அதாவது மக்களவைத் தேர்தலுக்கும், சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடைப்பட்ட 5 மாதத்தற்கு முன் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் அவசரம் அவசரமாக சேர்க்கப்பட்டுள்ளனர். 5 ஆண்டுகளில் 32 லட்சம்வாக்காளர்கள் சேர்க்கப்பட்டநிலையில், 5 மாதத்தில் 39 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி. இந்த 39 லட்சம் வாக்காளர்கள் யார், இந்த 39 லட்சம் வாக்காளர்கள் என்பது, இமாச்சலப்பிரதேச வாக்காளர்களுக்குச் சமம்.
இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி பிரச்சினையை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கா? நீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்...

2வதாக, மகாராஷ்டிராவில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையை விட அதிகமான வாக்காளர்கள் ஏன் இருப்பது எப்படி, குறுகிய காலத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை எப்படி அதிகரித்துள்ளது.
அரசின் புள்ளிவிவரங்கள்படி 9.54 கோடி பேர் வாக்களிக்க தகுதியான வாக்காளர்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளது, ஆனால், சட்டப்பேரவைத் தேர்தலில் 9.70 கோடி வாக்குகள் பதிவாகியது எப்படி. வாக்காளர்கள் பட்டியலை விரிவாக ஆய்வு செய்தபின் ஏராளமான குளறுபடிகளை எதிர்க்கட்சிகள் வெளிக்கொண்டுவரும். தேர்தல் ஆணையம் இதற்கு விரைவான விரிவான பதில் வழங்கிட வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.
இதற்கு தேர்தல் ஆணையம் அளித்த விளக்க அறிக்கையில் “ அரசியல் கட்சிகளை முன்னுரிமை பங்குதாரர்களாக தேர்தல் ஆணையம் கருதுகிறது. அவர்களின் ஆழ்ந்த கருத்துக்கள், கண்ணோட்டங்கள், ஆலோசனைகள், கேள்விகள் கருத்தில் கொள்ளப்படும். அவர்களின் கேள்விக்கான பதில்களை தேர்தல் ஆணையம் விரிவாக எழுத்துப் பூர்வமாக வழங்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில் “ ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுவெட்கக்கேடானது. டெல்லித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்வியை மறைக்கவே இதுபோன்ற குற்றச்சாட்டை வைக்கிறார், மக்கள் கவனத்தை திசைதிருப்புகிறார். தேர்தல் வியூகத்தில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும் அப்போதுதான் எங்கே தேர்தலில் தோற்றோம் என்பது புரியவரும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?