பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவின் மூலம் பிரபலமடைந்த ஐஐடி பாபா என்கிற அபய் சிங், ராஜஸ்தானில் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனால், காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்றபோது, அவர் கஞ்சா குடித்ததால் தனக்கு எதுவும் நினைவில் இல்லை என்று கூறி அதிர்ச்சியளித்துள்ளார். இந்த வழக்கில் ஜெய்ப்பூர் போலீசார் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.
இருப்பினும், குறைந்த அளவிலான கஞ்சாவை அவர் வைத்திருந்ததால் ஐஐடி பாபா கைது செய்யப்படவில்லை. இந்த விஷயம் தொடர்பாக தெற்கு துணை ஆணையர் முழுமையான தகவல்களை வழங்கியுள்ளார்.

ஜெய்ப்பூர் தெற்கு காவல் நிலையத்தின் தெற்கு துணை ஆணையர் ஷிப்ரபாத் கூறுகையில், அபய் சிங் என்ற நபர் ஒரு ஹோட்டலில் தற்கொலைக்கு முயற்சிப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து தகவல் கிடைத்தது. நிலைய அதிகாரி ராஜேந்திர கோதாரா தனது குழுவுடன் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அபய் சிங் ஹோட்டலில் இருப்பதைக் கண்டறிந்தனர். அவர் ஒரு பாக்கெட் கஞ்சாவை எடுத்து, தான் கஞ்சா குடித்துவிட்டதாக அவர்களிடம் கூறி உள்ளார். போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பிறகும் ''நான் குடிபோதையில் ஏதாவது தகவல் கொடுத்திருந்தால், அதைப் பற்றி எனக்கு எதுவும் நினைவில் இல்லை'' என பல்டி அடித்துள்ளார்.
இதையும் படிங்க: கும்பமேளாவின் கடைசி நாள்… மஹா சிவராத்திரியில் என்னென்ன ஏற்பாடுகள்..? பூசாரிகள் எடுத்த முடிவு..!

முன்னதாக அவரிடம் இருந்து போலீசார் அவர் வைத்திருந்த கஞ்சா பாக்கெட்டை பறிமுதல் செய்தனர். அதன் எடை 1.50 கிராம். குறைந்த அளவு கஞ்சா இருந்ததால் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
கும்பமேளா முடிந்துவிட்டது... ஆனால் ஐஐடி பாபா எனப்படும் அபய் சிங் இன்னும் பரபரப்பை கிளப்பி வருகிறார். சில நேரங்களில் அவர் தனது கணிப்புகள் மூலமாகவும், சில சமயங்களில் தனது குற்றச்சாட்டுகள் மூலமாகவும் பரபரப்பாகி வருகிறார்.

சமீபத்தில், ஒரு செய்தி சேனலில் நடந்த விவாதத்தின் போது அவர் தன்னை யாரோ தாக்கியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார். தான் அங்கு தவறாக நடத்தப்பட்டதாகவும், அந்த விஷயத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் குறித்தும் அவர் சந்தேகங்களை எழுப்பினார்.
பிப்ரவரி 28 ஆம் தேதி ஒரு செய்தி சேனல் அவரை ஒரு நேர்காணலுக்கு ஐஐடி பாபாவை அழைத்து இருந்தது. அப்போது சிலர் அவரை தாக்க முயன்றனர். சிலர் செய்தி அறைக்குள் சென்று கைகலப்பில் ஈடுபட்டனர். ஐஐடி பாபாவைவ் வலுக்கட்டாயமாக ஒரு அறைக்குள் பூட்டி வைக்க முயன்றனர். அங்கு இருந்த சுவாமி வேதமூர்த்தி நந்த சரஸ்வதி என்ற காவி உடை அணிந்த நபரும் ஒரு தடியால் தாக்கினார்.
இந்த ஐஐடி பாபா, இந்தியா - பாகிஸ்தான் ஐஐசி சாம்பியன் டிராபி தொடர் நடப்பதற்கு முன்னால், பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என ஆரூடம் கூறினார். ஆனால், இந்திய அணி வெற்றி பெற்றது.
இதையும் படிங்க: மகா கும்பமேளா: பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த பாவிகள்.. வெளிநாட்டு தொடர்பு அம்பலம்; பகீர் தகவல்கள்..!