ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த அடிகா மிர் என்ற சிறுமி உலகின் முதல் தரமான கார் பந்தயமான எப்-1 அகாடெமியின் டிஸ்கவரி யுவர் டிரைவ் திட்டத்துக்கு தேர்வாகியுள்ளார். ஆசியாவிலேயே இந்த வயதில் தேர்வாகிய முதல் சிறுமியும் இவர்தான். இந்தியச் சிறுமியின் திறமை, உலகளவில் வெளிப்படவும், சிறந்த எதிர்காலம் அமையவும் இந்த அகாடெமி அவருக்கு உதவும்.

உலகளவில் 8 முதல் 11வயது பிரிவினருக்கு நடத்தப்பட்ட தேர்வில் 3 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் அடிகாவும் ஒருவர். எப்-1 அகாடெமி இந்த 3 பேருக்கும் எப்1 ரேஸில் பயிற்சி அளித்து, அவர்களின் திறமையை மேம்படுத்தும். இந்த அகாடெமியில் பயிற்சி எடுக்கும் இந்த 3 பேரும், எதிர்காலத்தில் இந்த அகாடெமி சார்பில் நடக்கும் போட்டிகளில் பங்கேற்பார்கள்.
இதையும் படிங்க: காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, மகளுடன் கைது: இருவரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்

முதல்கட்டமாக இந்த வார இறுதியில் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் நடக்கும் முதல் 6 சுற்றுகளில் அடிகா உள்பட 3 பேரும் பங்கேற்க உள்ளனர். இந்த திட்டதில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அடிகா உள்பட 3 பேருக்கும் நிதி, தொழில்நுட்ப உதவிகள், மனரீதியான பயிற்சிகளை இலவசமாக அகாடெமி வழங்கும், 2025 சீசனுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 3 பேரும், உலக கார்டிங் சாம்பியன்ஷிப்பிலும் பங்கேற்பார்கள்.
அடிகாவின் மதிநுட்பம், புத்திசாலித்தனம், தீர்மானத்தின் வெளிப்பாடுதான் அவரின் முன்னேற்றத்துக்கு காரணம். கடந்த மாதம் இத்தாலியில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, பேபிரேஸ் பிரிவில் இந்திய அளவில் தேர்வாகிய முதல் சிறுமியாக அடிகா வந்தார். 2024 டிசம்பரில் நடந்த எதிர்கால சாம்பியன்ஸ்களுக்கான பைனல் போட்டியில் அடிகா 3வது இடத்தைப் பிடித்தார்.

எப்1 அகெடெமிக்கு தேர்வாகியுள்ளது குறித்து அடிகா கூறுகையில் “ எப்1 அகாடெமிக்கு நான் தேர்வாகியுள்ளது எனக்கும், இந்தியாவுக்கும் மாபெரும் பெருமை, கவுரவம். கடினமாக உழைத்து என் மீதான நம்பிக்கையைக் காப்பாற்றுவேன்” எனத் தெரிவித்தார்.
எப்1 அகாடெமியின் தலைவர் சுசி உல்ஃப் கூறுகையில் “ எப்1 அகாடெமி மூலம் இளம் பெண் ரேஸர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் இலக்கு. பேச்சோடு இருந்துவிடக்கூடாது, செயல்பாட்டிலும் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவைப் பொருத்தவரை கார்பந்தயங்கள் நடத்த போதுமான உள்கட்டமைப்பு இல்லை, இருப்பினும் அடிகா அவரின் தந்தையின் ஆதரவு, முன்னாள் ரேஸர் ஆசிப் நாசிர் மிர் ஆகியோரின் ஆதரவு, நம்பிக்கையால் இப்போது 10வயதிலேயே உலக சாதனையாளராக மாறியுள்ளார்.அடிகா ஏற்கெனவே பலதடைகளை உடைத்துவிட்டார், அவரின் கண்கள் மிகப்பெரிய பரிசுக்காக ரேஸுக்காக தயாராகியுள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் அதிபரை நேருக்கு நேர் உட்கார வைத்து கட்டப் பஞ்சாயத்து செய்த டிரம்ப்..! கடும் வாக்குவாதம்