உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா பாரமுல்லா ரயில் திட்டம் நிறைவடைந்து விட்டதால் காஷ்மீர் இப்போது கன்னியாகுமரி உடன் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டு விட்டது.
இந்த லட்சிய திட்டத்தின் கீழ் செனோப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் ஆகும். மேலும் இந்தியாவின் முதல் ரயில் கேபிள் பாலமான அஞ்சு பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் 71 வந்தே பாரத் அமிர்த பாரத் மற்றும் நமோ பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன கடந்த ஆறு மாதங்களில் 17 புதிய வந்தே பாரத ரகங்கள் மற்றும் ஒரு நம்ம பாரத் துறையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ்( இந்தியா) கூட்டணிக்கு சாவு மணி..! கலைத்து விடலாம் என உமர் அப்துல்லா அதிர்ச்சி..
தற்போது ஆயிரம் கிலோ மீட்டர் மெட்ரோ பாதைகளை அமைத்து இந்தியா சாதனை படைத்துள்ளது உலகின் மூன்றாவது பெரிய மெட்ரோ சேவையை கொண்ட நாடாக இந்தியா வருடத்திருக்கிறது.

நாட்டின் விமான போக்குவரத்து துறை வேகமான வளர்ச்சி பெற்று வருகிறது விமான நிறுவனங்கள் 1700 புதிய விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தங்களும் மேற்கொண்டுள்ளன.
அனைத்து குடிமக்களின் சுகாதார சேவைகளை உறுதி செய்வதற்காக நாட்டில் 1.75 லட்சம் சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பல்வேறு புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்கவரி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது". இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீர் -கன்னியாகுமரி இடையே நேரடி ரயில் அறிமுகம்
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டு விட்டதால் காஷ்மீருக்கும் கன்னியாகுமரிக்கும் இடையே நேரடி ரயில் போக்குவரத்து சேவை தொடங்க இருக்கிறது.

தற்போது கன்னியாகுமரி -ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி -கத்ரா கன்னியாகுமரி ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் ரயில் மொத்தம் 3 ஆயிரத்து 1227 கிலோமீட்டர் தூரத்தை 54 மணி 40 நிமிடம் நிமிடங்களில் கடைக்கிறது.
ஸ்ரீநகர் கன்னியாகுமரி நேரடி ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதும் ஸ்ரீநகர் முதல் கன்னியாகுமரி வரை ரயில் சேவை பயணிகளின் பயண அனுபவத்தை அதிகரிப்பது மட்டுமின்றி பள்ளத்தாக்கு மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரு பகுதிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கச் செய்யும். பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் இது உத்வேகத்தை அளிக்கும்.
இதையும் படிங்க: காஷ்மீர் பிரச்சினையை, ஐ.நா சபைக்கு கொண்டு சென்று இருக்கக் கூடாது ; நேருவின் தவறுகளில் இதுவும் ஒன்று; மூத்த காங்கிரஸ் தலைவர் கரண்சிங் குற்றச்சாட்டு