கொல்கத்தாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் ஒரு இளம் பெண் ஆகியோர் மர்மமாக இறந்தனர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், சித்தப்பா தான் அவர்களை கொலை செய்ததாக சிறுவன் ஒருவன் அளித்த வாக்குமூலம் இந்த வழக்கில் பரபரப்பான திருப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தங்கரா பகுதியைச் சேர்ந்த மூன்று பெண்கள் வீட்டில் இறந்துகிடக்க, அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர், இஎம் பைபாஸ் சாலையில் கார் மோதிய சம்பவத்தில் காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் முதற்கட்ட விசாரணையில், அது விபத்து அல்ல தற்கொலை முயற்சி என்று தெரிய வந்து.. அதைத்தொடர்ந்து இது காவல்துறைக்கு மிக சவாலான வழக்காக மாறியது..
இதையும் படிங்க: கொல்கத்தாவை கலக்கடிக்கும் குடும்ப தற்கொலை? மணிக்கட்டை அறுத்துக்கொண்டு பெண்கள் மரணம்.. ஆக்சிடெண்டில் சிக்கிய ஆண்கள்..!
இந்த சம்பவத்தில், மரணமடைந்த மூன்று பெண்களும் தற்கொலை செய்துகொண்டதாக, தொழிலதிபர் கூறுவதில் காவல்துறைக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இந்த நிலையில்சகோதரர்களான பிரணாய் மற்றும் பிரசன் இருவரும் தொழிலதிபர்கள். இவர்களுடன் பிரணாய் மகன் பிரதீப் (14) சென்ற கார் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. மூவரும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
அப்போதுதான் பிரணாய் தங்களது குடும்பத்தினர், தங்கராவில் உள்ள வீட்டில் சடலமாக இருப்பதாகக் கூறுகிறார். உடனடியாக காவல்துறை அவர்களது வீட்டிற்கு விரைகிறது. அங்கே மூன்று பெண்கள் சடலமாக இருக்கிறார்கள். வீடு முழுக்க ரத்தக் கறை. உடல் கூறாய்வில், பிரணாய் மனைவி சுதேஷ்னா, பிரசன் மனைவி ரோமி இருவரும் கழுத்தை அறுத்தும், பிரசன் மகள் பிரயம்வதா (14) விஷம் குடித்திருப்பதும் தெரிய வந்தது.
பிறகு பிரணாயிடம் நடத்திய விசாரணையில், குடும்பத்தினர் ஆறு பேரும் விஷம் சாப்பிட்டு சாக முடிவெடுத்தோம். ஆனால், ஒரு சிலர் கையில் நரம்பை அறுத்து இறக்க முடிவெடுத்தனர். அதுபோலவே நாங்களும் காரை வேகமாக இயக்கி விபத்தில் சாக நினைத்தோம் என்று கூறியிருந்தார்.

ஆனால், காயம் அடைந்த சிறுவன் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தங்கள் குடும்பத்தில் இரண்டு பெண்களையும் இளம்பெண் பிரியம் வதாவையும் கொலை செய்தது சித்தப்பா பிரசன்தான் (என்று கூறி அவரை அடையாளம் காட்டினார். இந்த கொலைகளில் அவர்ஈடுபட்டதற்கான சூழ்நிலை ஆதாரங்கள் வலுவாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இருப்பினும் மூத்த சகோதரரான பிராணாயும் இந்த கொலை சதி திட்டத்தில் உடந்தையாக இருந்திருக்கலாம் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
கொலை பற்றிய சில திட்டத்தை அறிந்து கொண்ட இளம்பெண் தூக்க மாத்திரைகள் மற்றும் உயர் ரத்த அழுத்தம் மருந்துகள் கலந்த கஞ்சி சாப்பிட மறுத்ததாக கூறப்படுகிறது
அவள் அதை உட்கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்ததற்கு அவளுடைய உதடுகளை சுற்றி காயங்கள் உட்பட உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் அறிகுறிகளும் காணப்பட்டன
இதற்குப் பின்னணியில், அவர்கள் செய்துவந்த தொழிலில் மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டதே காரணம் என்று அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து, கடந்த ஒரு வாரமாக அவர்களது நிறுவனம் மற்றும் வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறையினர் கைப்பற்றினர். அதில் சம்பவத்துக்கு ஒரு சில நாள்களுக்கு முன்பு, இவர்களை அடையாளம் தெரியாத பலர் சந்தித்ததாகவும், அவர்கள் ஒருவேளை கடன்காரர்களாக இருக்கலாம் என்றும் கிடைத்திருக்கும் ஆதாரங்களை வைத்து காவல்துறையினர் கூறுகிறார்கள்.
இதில், கொலை மற்றும் தற்கொலைக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் சம்பவம் நடந்த போது பிரணாய் நிதானமில்லாமல் வீட்டிலிருந்து வெளியேறுவது சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருக்கிறது.
எனவே அவர்தான் கடுமையான மன அழுத்தத்துக்கு உள்ளாகி, பெண்களை கொலை செய்திருக்கலாம் என்றும் காவல்துறை சந்தேகிக்கிறது. பிரணாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரசன் தேய் இன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இரு சகோதரர்களிடமும் விசாரணை நடத்தலாம் என மருத்துவர்கள் அனுமதி வழங்கியதும், இவர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும், சம்பவம் நடந்ததை மீண்டும் நடித்துக் காட்டவும் திட்டமிட்டுள்ளது.

மிகப் பணக்கார குடும்பமாக இருந்த பிரணாய் - பிரசன் குடும்பம், ஏராளமான கார்களுடன், நான்கு மாடிக் கட்டடத்தில் வாழ்ந்து வந்ததாகவும், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் இந்த துயர சம்பவங்களுக்குக் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
பிரசன் மற்றும் பிரணாய் சேர்ந்து பெண்களைக் கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. காரணம், விஷம் குடித்து இறந்த பிரயம்வதாவின் முகத்தில் காயங்கள் இருப்பதால், அவர் வற்புறுத்தி விஷம் குடிக்க வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எந்துள்ளது.
இதையும் படிங்க: கும்பமேளாவில் குளித்த விஜயகாந்த் குடும்பம்..! நெத்தியில் பட்டையோடு போட்டோ..!