பயங்கரவாதம், வறுமை உள்ளிட்ட பல முனைகளில் ஏற்கனவே போராடி வரும் பாகிஸ்தான், மற்றொரு சிக்கலை எதிர்கொண்டுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனிருக்கு எதிராக ராணுவத்தின் இளைய அதிகாரிகள் கோஷம் எழுப்பியுள்ளனர்.
பாகிஸ்தான் ராணுவத்தின் இளைய அதிகாரிகள், முனீர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். தனது சொந்த மக்களின் எதிர்ப்பால் முனிரின் கடும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளார். இளம் அதிகாரிகள் முனீரிடம் ''உங்கள் நேரம் முடிந்துவிட்டது. எனவே விரைவில் ராஜினாமா செய்யுங்கள்'' என கூறியுள்ளனர்.

இளநிலை அதிகாரிகள் முனிரை ராஜினாமா செய்யக் கோரி அவருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ''இராணுவம் அரசியல் துன்புறுத்தல், தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது'' எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் பாகிஸ்தான் ராணுவத்தின் சில கர்னல்கள், கேப்டன்கள், வீரர்களால் எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் ராணுவத் தளபதிக்கு சென்றவுடன் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ‘ஜம்மு காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள்’: ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை..!
அந்தக் கடிதத்தில், ''பாகிஸ்தான் படுதோல்வி அடைந்து வங்கதேசம் உருவான 1971 தோல்வியையும் முனீருக்கு நினைவுபடுத்தி உள்ளனர்.''இது ஒரு வாக்குவாதமும் அல்ல... உரையாடலும் அல்ல. இது உங்களுடைய 1971 ஜெனரல், அதன் நிழலில் உங்களைப் புதைக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்" என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் ரீதியான எதிர்ப்பை அடக்குதல், பத்திரிகையாளர்களை அமைதிப்படுத்துதல், ஜனநாயக சக்திகளை நசுக்குதல், இராணுவத்தின் கௌரவத்தை அழித்ததாக முனீர் மீது அதிகாரிகள் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பதவி நீக்கத்திற்குப் பிறகு நடந்த வன்முறை நடவடிக்கை, 2024 தேர்தல்களில் மோசடி போன்றவற்றையும் இது குறிப்பிடுகிறது. முனீரின் இளைய அதிகாரிகள் கடிதத்தில், இது கர்னல்கள், மேஜர்கள், கேப்டன்கள், வீரர்கள் உட்பட பாகிஸ்தான் ராணுவ படைகளின் குரல் என்று கூறியுள்ளனர். எங்கள் நிறுவனம், எங்கள் நாடு மற்றும் எங்கள் கௌரவத்தை நீங்கள் படுகுழியில் தள்ளுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். உங்கள் நேரம் முடிந்துவிட்டது. விரைவில் ராஜினாமா செய்யுங்கள். இல்லையெனில் நாங்கள் 'பெற்றதை' திருப்பிக் கொடுப்போம். நாங்கள் பலத்தைப் பயன்படுத்த வேண்டி இருந்தாலும் கூட அதனைச் செய்வோம்'' எனத் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் இராணுவத்தில் ஏற்பட்டுள்ள பிளவு, ஷாபாஸ் அரசின் பிரச்சினைகளை அதிகரித்துள்ளது. உண்மையில், அரசின் செயல்பாட்டில் இராணுவம் நிறைய தலையீடுகளைக் கொண்டுள்ளது. ராணுவ தளபதி முனீர் விரும்புபவர் மட்டுமே அரசை அமைக்கிறார். இந்நிலையில் , இளைய அதிகாரிகளால் இராணுவத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு, ஷாபாஸ் அரசுக்கு வரவிருக்கும் காலம் எளிதாக இருக்கப் போவதில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இதையும் படிங்க: பிரதமர் மோடியின் பேச்சு என்னாச்சு..! பாகிஸ்தான் தேசிய தினத்தை புறக்கணித்த இந்திய அதிகாரிகள்..!