இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேகதாது அணைத்து அனுமதி பெற கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் தமிழக அரசு அமைதி காக்காமல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா, துணை முதலமைச்சரும், நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான டி.கே. சிவக்குமார் ஆகியோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர். பாட்டீலை டெல்லியில் சந்தித்து அனுமதி கேட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு காவிரி நீர் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளில் கர்நாடகம் தீவிரம் காட்டி வரும் நிலையில், அதைத் தடுப்பதில் தமிழகம் அலட்சியம் காட்டுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளார்.மேகதாது அணைக்கு அனுமதி கூறி மத்திய அரசை கர்நாடகா வலியுறுத்தி இருப்பதை சாதாரண விஷயமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் கடந்த மாதம் ஏழாம் தேதி கர்நாடகா சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய அம் மாநில முதலமைச்சர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான ஆயத்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும் மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்ததை சுட்டிக்காட்டினார்.
இதையும் படிங்க: திருக்குறள் முதல் அகழாய்வு வரை.. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த பட்ஜெட்!!

அதன் தொடர்ச்சியாக தான் மத்திய அமைச்சரை கர்நாடக முதலமைச்சர் துணை முதலமைச்சர் சந்தித்திருப்பதாக பார்க்க முடிகிறது என்று கூறியுள்ள ராமதாஸ், மேகதாது அணை கட்ட கர்நாடகம் தீவிரம் காட்டுவதை தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் போதெல்லாம், தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் எந்தக் கொம்பனாலும் மேகதாது அணையைக் கட்ட முடியாது என்று கூறி கடந்து சென்று விடுகிறது., அதுமட்டுமின்றி, கர்நாடக ஆட்சியாளர்களிடம் ஒட்டி உறவாடுகிறது., இவற்றைப் பார்க்கும் போது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழகம் அதன் உரிமையை இழந்து விடுமோ என்ற ஐயம் தான் ஏற்படுகிறது என கூறியுள்ளார். மத்திய அரசின் ஒப்புதலோடு மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரித்து அனுமதி கோரி வருகிறது. வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்த மத்திய அரசு, அணை கட்டவும் அனுமதி அளிக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என எச்சரித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு அலட்சியமாக இருந்ததன் காரணமாகத் தான் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே ஹேமாவதி, ஹாரங்கி, கபினி, சுவர்ணவதி ஆகிய 4 அணைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும்., அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாகத் தடுப்பதற்கான ஒரே வழி., எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சிறுபான்மையினருக்கு எங்களைப்போல இடஒதுக்கீடு தரமுடியுமா? பாஜக-வுக்கு டி.கே.சி சவால்..!