ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்கும் இந்த விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லி 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறி இருக்கிறது.
70-க்கும் அதிகமான துணை ராணுவ படையினர் மற்றும் 70000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 2500 க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மொத்தத்தில் விழா நடைபெறும் பகுதிக்குள் யாரும் ஊடுருவி விடாமல் தடுக்கும் வகையில் ஆறு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.
இதையும் படிங்க: இந்தியா- சீனாவிற்கு இடையே நட்பு ஏற்படுமா..? வெளியுறவு செயலாளர் பெய்ஜிங் பயணம்..!
வான்வழி தாக்குதல்களை கண்டறிந்து அவற்றை செயலிழக்க செய்வதற்காக டெல்லியை சுற்றி நான்கு கிலோ மீட்டர் தூரத்திற்கு ட்ரோன் எதிர்ப்பு கருவிகளும் நிறுவப்பட்டு இருப்பதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குடியரசு விழா அணிவகுப்பு ஊர்வலம் நடைபெறும் ராஜபாதை பகுதியில் உள்ள கட்டிடங்களின் கூரைகளில் குறி பார்த்து சுடும் துப்பாக்கி வீரர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.
200க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு ஜன்னல் மற்றும் கதவுகள் மூடப்பட்டன. மத்திய மற்றும் மாநில பாதுகாப்பு படை வீரர்கள் ஒருங்கிணைந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கமாண்டோ வீரர்கள், விரைந்து செயலாற்றும் அதிரடிப்படை வீரர்கள், சதி வேலை எதிர்ப்பு சோதனைகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு படை பிரிவினர் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.
"அணிவகுப்பு நடைபெறும் புது டெல்லி, மத்திய டெல்லி மற்றும் வடக்கு டெல்லி மாவட்டங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதத்தில், அவற்றை வெவ்வேறு மண்டலங்களாக பிரித்து இருக்கிறோம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிசிபி அல்லது கூடுதல் டிசிபி நிலையில் உள்ள அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளுக்கு தலைமை தாங்குகிறார்கள்" என்றும் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
குடியரசு தின விழா அணிவகுப்பு விஜய் சவுக்கில் தொடங்கி, செங்கோட்டை நோக்கி சென்றது. இந்தியா கேட் ,தேசிய போர் நினைவிடத்திலும் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
நேற்று மாலை 6:00 மணியிலிருந்து விஜய் சவுக்கில் இருந்து இந்தியா கேட் வரையிலான பாதையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தி நிறுத்தி வைக்கப்பட்டது. அணி வகுப்பு முடியும் வரை இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் கூறினார்.

பாரா கிளைடர்கள், பாரா மோட்டாரர்கள், டேங்க் கிளீனர்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், யு ஏ வி மைக்ரோ லைட் விமானம், ரிமோட் பைலட் விமானம், வெப்ப காற்று பலூன்கள், சிறிய அளவிலான ஆற்றல் கொண்ட விமானங்கள், குவாட் காப்டர்கள் அல்லது விமானத்திலிருந்து பாரா ஜம்பிங் போன்ற வழக்கமான வான்வழி தளங்களில் பறப்பது ஆகியவற்றுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி வரை டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பு முடியும் வரை வெளி மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு கனரக போக்குவரத்து வாகனங்கள் மற்றும் இலகு ரக சரக்கு வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது.
அதே நேரத்தில் பொதுமக்கள் விழாவில் பங்கேற்பதற்கு வசதியாக அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு மெட்ரோ சேவை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதையும் படிங்க: "பெருமைமிகு 75 ஆண்டுகள்" : குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்