கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் பெயரை கூட சொல்லாமல் இருந்ததும் அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தேச பொருளாக மாறிய நிலையில், சட்டசபையிலும் இருவருக்கும் இடையே சமூக நிலை ஏற்படவில்லை. செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்பதை அவரிடமே கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தது இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருவதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் ரூ.50 ஆயிரம் கோடி ஊழல்… நிர்மலா சீதாரமனை சந்தித்து உண்மையை உரைத்த கே.பி.ராமலிங்கம்..!

சமீபத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். பாஜகவுடன் அதிமுக கூட்டணியை உறுதி செய்ய சென்றதாக பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க நேரம் கேட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்காமல் செங்கோட்டையன், திடீரென டெல்லிக்கு பயணித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் டெல்லியில் இருப்பதால், கூட்டணி உறுதி செய்ய இருக்கலாம் என கருதப்படுகிறது.

எடப்பாடி பழனிச்சாமிக்கும் - செங்கோட்டையனுக்கும் இடையே உள்ள மோதல் போக்கு டெல்லி வரை சென்று தனித்தனியாக அமித்ஷாவை சந்திப்பதில் நிற்கிறது என்றால்… அதிமுகவில் உள்ள பிரச்சனை வீரியம் பெறுமா அல்லது பாஜக கூட்டணியால் சமரசம் ஆகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஏளனம் என்று வார்த்தையை விட்ட நிர்மலா சீதாராமன்.. எள்ளி நகையாடுவதா என்று கொந்தளிக்கும் கனிமொழி.!!