தமிழக கடலோரப் பகுதிகளில் இருந்து அந்தமான், இலங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு தடை செய்யப்பட்ட பொருட்களை கடத்தி கூடுதல் லாபத்திற்கு விற்பனை செய்வதை சிலர் வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். இதனை தடுக்கும் வகையில் அவ்வப்போது போலீசார் ரோந்து பணியிலும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே வெள்ளப்பட்டி கடற்கரையில் கியூப் பிரிவு போலீசார் அதிகாலையில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது இலங்கைக்கு படகுகள் வாயிலாக கடத்துவதற்காக அசோக் லியோலேண்ட் மற்றும் டாடா ஏஸ் சரக்கு வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட 30 கிலோ பீடு இலைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடத்தலில் ஈடுபடும் முயன்ற சிலுவைப் பட்டி கணபதி நகரை சேர்ந்த மாயாண்டி மற்றும் அவரது சகோதரர் மகேஷ் குமார், அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டனி ஜோசப் ஆகிய மூவரும் போலீசாரிடம் இருந்து தப்ப முயன்ற நிலையில், போலீசார் அவர்கள் மூவரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
இதையும் படிங்க: வார்த்தையை விட்ட தர்மேந்திர பிரதான்.... கொதித்தெழுந்த திமுக எம்.பி.க்கள்... அனல் பறந்த நாடாளுமன்றம்...!
சுமார் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான பீடியலைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், இந்த கடத்தலுக்கு உந்ததலாக இருக்கும் நபர்களின் விவரங்கள் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக பெரிய அளவிலான தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திமுக அரசு மாணவர்களின் எதிர்காலத்தை கெடுத்து, நாசமாக்குகிறது... தர்மேந்திர பிரதான் ஆவேசம்..!